பெண்கள் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல.. தினமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!

Su.tha Arivalagan
Mar 08, 2026,01:59 PM IST
- ஆனந்தி.ச

இன்று நாம் கொண்டாடுவது மகளிர் தினம்.
ஆனால் உண்மையில் பார்க்கும்போது, பெண்கள் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல —
அவர்கள் தினமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு வீட்டில் “Head of the family” யார் என்று கேட்பார்கள்…
ஆனால் “Heart of the family” யார் என்று கேட்டால்
பதில் சொல்ல யாருக்கும் நேரம் பிடிக்காது! 

பெண் multitasking queen!
காலை அலாரம்,
மதியம் ஆலோசகர்,
மாலை ஆசிரியர்,
இரவு மருத்துவர்!
சில சமயம் நீதிபதி கூட! 

“பெண்கள் emotional” என்று சொல்வார்கள்…
ஆனா அந்த emotion தான் இந்த உலகத்தை மனிதமாக வைத்திருக்கிறது.

“Behind every successful man, there is a woman” என்று பழமொழி சொல்கிறது.
இப்போது காலம் மாறிவிட்டது —
Behind every successful woman…
அவள் தன்னம்பிக்கையும், அவள் உழைப்பும் தான்!



யாராவது “பெண் strong இல்லை” என்று சொன்னால்,
ஒரு தாயின் மனதை பார்த்து பேச சொல்லுங்கள்.
அவள் தாங்கும் வேதனை,
அவள் காட்டும் பொறுமை,
அவள் கொடுக்கும் அன்பு —
இவை எல்லாம் strength இல்லையா?

Malala Yousafzai கூறியது போல,
“ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகத்தை மாற்றும்.”
அந்த மாற்றத்தின் மையத்தில் பெண்கள் நிற்கிறார்கள்.

Mother Teresa கூறியது போல,
“பெரிய செயல்களை செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறிய செயல்களை செய்யலாம்.”
அந்த அன்பு தான் பெண்களின் உண்மையான சக்தி.

நண்பர்களே,

ஒரு பெண் பிறக்கும் போது
அவள் ஒரு குழந்தை மட்டும் இல்லை —
ஒரு எதிர்காலம் பிறக்கிறது.

ஒரு பெண் கல்வி கற்கும் போது
அவள் வாழ்க்கை மட்டும் மாறவில்லை —
ஒரு குடும்பத்தின் விதி மாறுகிறது.

ஒரு பெண் தன்னம்பிக்கை பெறும் போது
அவள் மட்டும் உயரவில்லை —
சமுதாயம் உயர்கிறது.

பெண்களுக்கு பரிசு கொடுக்க வேண்டாம்…
அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

பெண்களை பாதுகாக்க வேண்டாம்…
அவர்களின் கனவுகளை பாதுகாப்போம்.

பெண்களை சமம் என்று சொல்ல வேண்டாம்…
அவர்களை சரியாக மதிக்க ஆரம்பிப்போம்.

முடிவாக நான் சொல்ல விரும்புவது

பெண் ஒரு கதையின் பாத்திரம் அல்ல…
அவள் கதையை எழுதும் எழுத்தாளர்.

பெண் ஒரு chapter அல்ல…
அவள் முழு புத்தகம்.

அந்த புத்தகத்தை நாம் மதிக்க கற்றுக்கொண்டால்,
இந்த உலகம் இன்னும் அழகாகும்.

(ஆனந்தி ச, பட்டாதாரி ஆசிரியர் ( ஆங்கிலம்), அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)