World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Jun 03, 2026,12:27 PM IST
- இரா. மும்தாஜ் பேகம்
சிக்கு...சிக்கு மிதிவண்டி
சின்னப் பையன் மிதிவண்டி
சீராக மிதித்தாலே
சீக்கிரமா போகும் வண்டி
பெட்ரோலும் தேவையில்ல
டீசலும்தேவையில்ல
காத்து அடிச்சா டியூப்ல
காடு,மேடெல்லாம் ஓடுமில
காற்று மாசு இல்லாம
காலத்துக்கும் ஓட்டலாம்
உன்ன அதுல ஏத்திக்கிட்டு
ஊரை எல்லாம் சுத்துவேன்
டிரிங்...டிரிங்...டிரிங்
(இரா.மும்தாஜ் பேகம், திருச்சி, கிரியேட்டிவ் ரைட்டர்)