அதிரசம், முறுக்கு, வடை, பணியாரம்.. அன்றைய தித்திக்கும் தீபாவளி திருநாள்!
- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
நள்ளிரவில் துயில் எழுந்த அம்மா!
நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை ,
அதிரசம், முறுக்கு, வடை, பணியாரம் என,
அத்தனை வகை தின்பண்டங்கள் செய்து ,
குழந்தைகளை எழுப்பி, எண்ணெய் தேய்த்து,
குளிக்க வைத்து, பூஜை செய்து,
புத்தாடை அணிவித்து, மத்தாப்பு கொளுத்தி,
புன்முறுவலோடு அனைவரையும் சாப்பிட வைத்து,
அதைப் பார்த்து மகிழ்ந்து பின்,
அண்டை வீட்டாருக்கு இனிப்பு வழங்கி,
அசதியில் கொஞ்சம் உடல் சாய்ந்து,
அன்போடு மதியம் சுவையாய் சமைத்து ,
மணவாளனுக்கும், மக்களுக்கும் பரிமாறி,
மகிழ்வோடு அனைவருடனும் பேசி சிரித்து,
இரவு பட்டாசு கொளுத்தி ரசித்து,
இனி அப்பாடா என முடிந்து போகும் ,
அன்றைய நாளில் தித்திக்கும்
ஆனந்த தீபாவளி திருநாள்.
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)