தன்னந்தனியாய் போராட்டம்.. கலையின் பல்பொருள் ஹைக்கூ கவிதைகள்!

Su.tha Arivalagan
Feb 19, 2026,04:11 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


வீட்டைச் சுற்றி குடியிருந்த  செழுமைத்  தோட்டம் ,

இட நெருக்கடியால், சுதந்திரமாய் வேர் விட முடியாத ...

மொட்டை மாடிக்கு இன்று குடியேறிவிட்டது..!!


காமத் தீயில் வெந்து போனது, காமுகனின் மனசு.

வலி தாங்க முடியாமல் கதறுகிறாள் ...

ஏன் எனப் புரியாத சிறுமி..!!




சுமை தாங்கும் தோள்கள்..!!

சுழலும் பூமிக்கு அதுவே அச்சாணி..!!

உழைப்பால் விடியும் வாழ்வு.


உழைப்பே உயிர் மூச்சு ..!!

உலகம் உய்யும்  உன்னால்..!!

உன் வியர்வைத் துளிகள் உலகின்  சக்கரம்..!!


நெகிழியால்  மூழ்கிய குப்பை மேடு.

பூமி அழுகிறது.


ஒரு முறை மட்டுமே உபயோகம்.

நிரந்தர பாதிப்பு.

நெகிழி தரும் பாடம்.


அடக்குமுறை வேண்டாம்.

ஆண் பெண் சமமே.

உலகம் செழிக்கும். 


சங்கிலிகள் உடைப்போம் .

சுதந்திரம் பெறுவோம் .

சரித்திரம் படைப்போம் .


வீடு அலுவலகம்  இரட்டை சுமை.

தன்னந்தனியாய் போராட்டம். 

வாழா வெட்டி என்று பெயர்.


அணியும் ஆடையில் 

தன்னம்பிக்கை  பூக்கும்.

ஆடை நாகரிகம். 


வண்ண வண்ணக்  மெல்லிய குழாய்கள்.

லெக்கின்ஸ் விலையே குறைவு.

எக்கச்சக்க லாபம்.


உடல் வளைவுகள் காட்டும் லெக்கின்ஸ். 

வயிற்றுக் குழி காட்டும் டாப்ஸ்.

கண்கள் தானாக மூடிக் கொள்கிறது.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)