எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவையின் முத்தமிழ் விருது

Su.tha Arivalagan
Oct 28, 2025,05:10 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை குழுமங்கள் மற்றும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து நடத்திய, ஏழாவது உலக முத்தமிழ் மாநாடு 2025, 25. 10. 25 மற்றும் 26. 10. 25 ஆகிய இரு தினங்களில், சால்வேஷன் ஆர்மி சென்டர் ,வேப்பேரி, சென்னையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து கவிஞர்கள் இதில்பங்கு பெற்றனர்.


முதல் நாள் நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன், குத்து விளக்கு ஏற்றி, மாநாடு துவங்கியது.  முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்   வரவேற்புரையும் ,அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழ்மாமணி, தாழை இரா. உதயநேசன் தலைமையுரையும் ஆற்றி, விழா இனிதே துவங்கியது.



முனைவர் தாழை இரா. உதயநேசன் ,ஆய்வு கோவையினை வெளியிட ,கலையரசி உதயநேசன் அதனைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து  மருத்துவர்  ஜெய ராஜமூர்த்தி, இயக்குனர் பிருந்தாசாரதி, கவிஞர் ஜெயபஸ்கரன், இயக்குனர் லிங்கசாமி  சிறப்புரையாற்றினர். 


அதனை அடுத்து  மகளிர் கவியரங்கம், பொது கவியரங்கம்  சிறப்பாக நடைபெற்றது.  திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் எழுதிய "காட்சி ஊடகக் கனவுகள்" என்ற நூலினை நடிகை தேவயானி இராஜகுமாரன் வெளியிட்டார்.  தொடர்ந்து  முனைவர் தாழை இரா. உதயநேசன் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன.


இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சிறுவர் கவியரங்கம் ,தன்முனைக் கவியரங்கம், ஹைக்கூ கவிரங்கம் ஆகியவை  சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.   விஜிபி உலகத் தமிழ் சங்க நிறுவனத் தலைவர் செவாலியர் டாக்டர் வி. ஜி.சந்தோசம் பட்டமளித்து, சிறப்புரையாற்றினார்.




அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி விருதுகளை , பல்வேறு நாடுகளில் இருந்து  வருகை தந்த  பல கவிஞர்களுக்கு ,மதிப்புறு  முனைவர் ரேகா அவர்களும், திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் அவர்களும் வழங்கினர் . 


இதில் எழுத்தாளர் கவிஞர் இரா. கலைச்செல்விக்கு  முத்தமிழ் விருதும், முத்தமிழ் தொலைக்காட்சி விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நன்றியுரையுடன் விழா இனிதே முடிவடைந்தது. கவிஞர் இரா. கலைச்செல்வி, மகளிர் கவியரங்கம் ,பொது கவியரங்கம் ஆக்கியவற்றில் பங்கு பெற்று, பாராட்டுச் சான்றிதழ் பெற்றார். அத்தோடு, .ஆய்வு கோவையிலும்  ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சான்றிதழ் பெற்றார். முத்தமிழ் தொலைக்காட்சி  விருதும்,  முத்தமிழ்  விருதும் , இயக்குனர்  கவிஞர் யார் கண்ணன்  மற்றும் முனைவர் ரேகா அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)