மனமே வாழ்க.. கலையின் கவிதை சிதறல்கள் 2!

Su.tha Arivalagan
Oct 10, 2025,04:20 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி, 


மனமே வாழ்க!


அன்பு  மனம் என்றும் வாழ்க...!! 

அமைதி கொண்ட  அழகு மனம்..!!


எளியோருக்கு உதவும் ஏற்றமிகு மனம்..!!

எளியோரை வாழ்த்தும் உயர்ந்த மனம்..!!


நல்ல எண்ணங்கள் கொண்ட  மனம் ..!!

நல்லோர் அனைவரையும்  போற்றும் நல்மனம்..!!


யாரையும் காயப்படுத்தாத உயர்ந்த மனம் ..!!

யாரையும் சமமாய் பார்க்கும் சாத்வீக மனம்..!!


அடுத்தவர் துயரை உணரும் மனம் ..!!

ஆடம்பரம் விரும்பாத எளிமை  மனம் ..!


அர்த்தமுள்ள மனமே அகிலத்தின் ஆதாரம் ..!!

அன்புமனமே அனைத்து உயிருக்கும் ஆதாரம்..!!


அன்பு மனம் கொண்டு அகிலத்தையே ஆளலாம்..!!

தன்னம்பிக்கை கொண்டு தரணியிலே உயரலாம்..!!





நட்புக்கரங்கள்


நட்பு கொண்டு  இணைந்த கரங்கள் ..!!

நட்பின் இலக்கணமாய் வாழும் உயிர்கள் ..!!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ,

நட்பால் வளர்ந்த  உணர்வுபூர்வ உறவுகள்..!!


துன்பம்  வாழ்வில் வரும் போதெல்லாம் ,

துயர் துடைக்கும் உன்னத நட்பு..!!

துனிந்து தோள் கொடுக்கும் தோழனே ,

துக்கத்தில் ஆறுதல் தரும் தெய்வம்..!!


வாழ்க்கைப் பயணத்தில் கரம் கோர்த்து ,

வரும் நட்பே காலத்தின் கடவுள்..!!

வாழ்க்கையின் வரம் நல்ல நண்பர்கள்..!!

வாழ்வோம்  என்றும் நட்பு கரங்களோடு..!!


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)