சதம்!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
சதா உழைத்து
சதம் அடிப்போம்
சதி வென்று
இலக்கு அடைவோம்
சதம் என்பது இலக்கு என்றால்
ஆயிரம் சதம் கவனம்
அதன்மேல் வேண்டும் உனக்கு....
கவனம் சதம் என்றால்
தடையெல்லாம் வெற்றியின் படிகள்தான் தோழா....
கண்ணும் கருத்துமாக இருந்தால்
வெற்றிக்கோப்பை உனக்கே உனக்கு...
பதறாத காரியம் சிதறாது....
சிந்தையில் கவனம் சதம் என்றால்
வாழ்கையில் சதம் அடித்து
தங்கத்தேரில் உலாவருவாய்
பார் போற்ற சிகரம் தொடுவாய்.
உழைப்பின் வியர்வை
வெற்றியின் மணமாகும்,
நம்பிக்கை தீபம்
நாளெல்லாம் ஒளி தரும்.
நேர்மை நெஞ்சில்
நிலையாய் குடியிருந்தால்,
விழிகள் முன்னே
விழிப்பு இருந்தால்,
விதியும் வணங்கும்—
வெற்றி உன் பெயர் சொல்லும்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)