பங்கேற்பு!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
சும்மா நின்று வேடிக்கை பார்ப்பதை விட சிறந்தது பங்கேற்பு......
வெற்றியும் தோல்வியும் பங்கேற்பவனுக்கே .....
வெற்றியில் மகுடமும்
தோல்வியில் மகுடத்தை அடைவதற்கான வழியும்
அடங்கியுள்ளதை மறுக்க முடியுமா....
பங்கேற்பவனுக்கே இது சாத்தியம்.....
வேடிக்கை பார்ப்பவர்களும்,
தயக்கம் கொள்பவர்களும் சிகரம் தொடலாம்
பங்கேற்கும் எண்ணம் கொண்டால்.....
தோல்வியில் அடங்கியுள்ளது வெற்றிக்கான தந்திரங்கள் ...
வெற்றியில் அடங்கியுள்ளது தொடர் முயற்சியும் பயிற்சியும் .....
இவையனைத்தும் அடங்கியுள்ளது
"பங்கேற்பு" என்ற நுழைவு வாயிலில்......
பங்கேற்று வெற்றி கொள்வோம்
என்னால் முடியுமென்று வீரமுழக்கம்
கொள்வோம்.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)