ஒர் ஆண்டு கடந்த பாதை

Su.tha Arivalagan
Mar 14, 2026,01:21 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


வெற்றுக்காகிதமா அல்லது வரலாற்றுக் காகிதமா என நிர்ணயிப்பது யாரோ....??? 


நிராகரிப்பது   யாரோ....???? 


யாருக்கும் இங்கே உரிமை இல்லை 

யாருடைய ஆண்டையும் களவு கொள்ள....!!!! 


இலக்கு இல்லாதவனின் ஒர் ஆண்டு 

வாழ்ந்தான் தவிர எதையும் 

வண்ணமையால் பதிவு செய்யவில்லையே...


திருப்பி திருப்பி பார்த்தாலும்

வெறுமையே - பசுமையில்லையே... 




சரித்திரம் எங்கே....??? 


இலக்கு கொண்ட ஒருவனின் ஒர் ஆண்டு கடந்த பாதை 

கல்லும் முள்ளும், கஷ்டமும் நஷ்டமும், இன்பமும்

துன்பமும், தோல்வியும், வெற்றியும் 

ஒவ்வொரு பக்கத்திலும் பதிவாகி 

பொருள் பொதிந்த 

பசுமையாய் பளபளக்கும்...!!! 


ஏதோ ஒரு சரித்திரம் சொல்லும்...!!!! 


திருப்பி திருப்பி பார்த்தாலும் கரும்பின் சுவை போல இனிக்கும்....!!! 


சின்ன சின்ன செயல்களின் தொடர்ச்சிதான்

சாதனைகளின் உச்சம் தொடும்..... !!! 


உங்களின் ஒர் ஆண்டு கடந்த பாதை 

மற்றும் இனி வரும் ஆண்டுகளின் பாதை 

வண்ண மையால் நீயே எழுதி

சரித்திரப் பாதை ஆக்கிக் கொள்.... !!!! 


சிந்தனை செய் மனமே சிறந்த 

வாழ்க்கை உனக்கே....!!! 


முடியும் என்று சொல் முடியாது என்பது உன்னை விட்டோடும்.... !!! 


கடந்து வந்த பாதை காலத்தால் 

கரையாதது ...!!! 


பசுமரத்தாணி

போல என்றும் பசுமையானது ... !!


வாழும்போதே வாழ்க்கையை அனுபவித்து பொருள்

பொதிந்ததாய் மாற்றிடு...!!! 


வரலாற்றில் தடம் பதித்திடு ...!!! 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)