விண்ணமுதம்!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஒப்பந்தமே....
பண்டமாற்றம் செய்திடுமே...!!!
மண்ணின் நீர்நிலைகளும்
பங்கு கொண்டிடுமே....
கதிரவனும் அங்கே ஒளி பாய்ச்சிடுமே...!!
வெப்பத்தால் நீரும்
ஆவியாகிடுமே ......
காற்றில் மிதந்தே விண்ணைச் சேர்ந்திடுமே....!!!!
வெப்பம் குறைந்து நீர்மத்துளிகள்
ஆகிடுமே...
தொங்கல் நிலை மேகங்கள்
உருவாகிடுமே...!!!
கார்முகில் மேகங்கள்
கூடி பேசிடுமே...
குளிர்ந்த காற்றும் சென்று
நட்பு பாராட்டிடுமே....!!!
மழைமேகங்கள் விண்ணமுதை
பூக்களாய் தூவிடுமே..
விண்ணமுதம் மண்ணைவந்து
அணைத்திடுமே....!!!
பயிர்கள் எல்லாம் செழித்திடுமே
விளைச்சல் தந்திடுமே...
விண்ணமுதம் உயிர்களுக்கு அமுதம்
நல்கிடுமே...!!!
உண்பார்க்கு நல்ல உணவினை
விளைவித்து தந்திடுமே...
இருந்திடுமே...!!!
விண்ணும் மண்ணும் மகிழ்ந்திடுமே ...
உயிர்களின் செழிப்பை கண்டு
இன்பங்கள் கோடி அடைந்திடுமே ..!!
விண்ணமுதம் நம்மை வாழவைக்கும்
உயிரமுதமே....
வீணாக்காமல் அதனை மாசாக்காமல்
முறையாக காத்திடுவோமே...!!!
என்றும் இயற்கையை போற்றி வணங்கிடுவோமே....
இன்பங்கள் நிலைத்து
செழிப்புடன் வாழ்ந்திடுவோமே....!!!
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒப்பந்தமே....
விண்ணமுதம் பூமிக்கு வந்தடைந்திடுமே..!!!
நீராவியாகி விண்ணுக்கு
சென்றிடுமே ....!!!!
உலகம் உள்ளவரை நீர்சுழற்சி
நடந்திடுமே..!!!
உயிர்களின் வாழ்க்கை சுழற்சிக்கு
காரணமாகிடுமே..!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)