நீரே.. நீ எங்கள் வளமே!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
வானத்தின் அமிர்தமே
எங்கள் உயிர்த்துளியே.....
வடிவமில்லா திரவமே
பல வடிவம் உனக்கே.....
நிலத்தடிதான் உன்வீடா
உயிரினங்கள்தான் உன்செல்லங்களா......
பாரபட்சம் உன்னிடம்இல்லை
அள்ளி அள்ளித்தரும்
அமுதசுரபியே.....
தோண்டத்தோண்டசுரப்பாயே
பருகப்பருக தாகம்தீர்ப்பாயே....
வான்மகள் உனைதூவ
பூமித்தாய்அள்ளி அணைக்க...
உயிரினங்கள் பருகிமகிழ
தாவரங்கள் உறிஞ்சிகுடிக்க...
இயற்கை அன்னை பச்சைப்பட்டு உடுத்த....
இளந்தென்றல் தெருவில் ஓட
நீ ஆற்றில் ஓட.....
ஆறு கடலில் கூட
சமுத்திரமானாய்....
சிறு துளி பெருவெள்ளம்
சீராட்டி பாதுகாப்போம்....
அணைகளில்தேக்கிவைத்து உயிர் காப்போம்.. ...
பருவத்தே பொழிந்திடு பார் சிறக்க வந்திடு.... ..
மழைமுகம்காணாப் பயிர்போல
உலகமே காத்திருக்கு உனக்காக....
சின்னஞ்சிறுசுகள் கப்பல்விட
பெருசுகள் கதைபேச ....
உன்வரவுதான் சுகம்தரும்
உயிர்கள் அனைத்தும் தழைத்தோங்கும்.....
துப்பார்க்குத்துப்பாய என வான்சிறப்பில்
வள்ளுவரும் எடுத்தியம்பினாரே...
உணவினை விளைவித்து தந்து நீயும் ஒரு உணவாக இருப்பதுவும் நீயே..
நீர் இன்றி நிலம் ஏது...
நிலம் இன்றி மனிதன் வாழ்க்கை ஏது...
நீரே நீ எங்கள் வளமே ...
வானம் தொடும் தூரம்...
மழைத்துளியின்
ஈரம்...
மண் வாசம் நேசிப்போம்..
மழைத்துளியை பாதுகாப்போம்....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)