அன்னை சொல்லித் தந்த மொழி.. தாலாட்டில் கேட்ட மொழி ... !
- க. யாஸ்மின் சிராஜூதீன்
அன்னை சொல்லித் தந்த மொழி..
தாலாட்டில் கேட்ட மொழி ...
பாட்டி கதையில் வளர்ந்த மொழி...
சுற்றத்தாருடன்
பழகிய மொழி...
நண்பர்களுடன் கற்ற மொழி ...
பள்ளியிலே பயின்ற மொழி...
தாய்மொழி – என் உயிர்மொழி....
உயிரின் முதல் மொழி
உணர்வின் இனிய வழி....
சிரிப்பின் சுவையும்
கண்ணீரின் கதையும் கூறும் மொழி...
பாசத்தின் வாசம் வீசும் மொழி...
பாரம்பரியத்தின் வரலாறு சொல்லும் மொழி..
பிப்ரவரி இருபத்தொன்றாம் நாள்
பெருமையுடன் நினைவு கூறும் உலக தாய் மொழி நாள்...
மொழிக்காக உயிர் தந்தோரின்
மரியாதையை மனதில் கொண்டு மரியாதை செலுத்தும் நாள்...
எத்தனை மொழிகள் உலகில் இருந்தாலும்
என் தாய்மொழி போலாகுமா...
தமிழ்மொழியாம்
நம்தாய்மொழி..
செந்தமிழ் மொழி
பைந்தமிழ் மொழி
உலகிலேயே தொன்மையான மொழி...
பாரம்பரியமும்
பண்பாடும்
பேசும் மொழி...
தாய்மொழியை வணங்குவோம்
தாய்மொழியை காப்போம் ...
தாய்மொழி வாழ்க!
தமிழ் மொழி வளர்க!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)