எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
மும்பை : ரிலையன்ஸ் (ராகா) குழும தலைவர் அனில் அம்பானிக்கு மொந்தமான 50க்கும் மேற்பட்ட கம்பெனிகள், 25 தனிநபர்களின் வீடுகள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும (RAAGA) கம்பெனிகளில் பண மோசடி நடத்திருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. Yes வங்கி ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த புகார்களின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழு கம்பெனிகள் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டில் உள்ள 35 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிரடி சோதனையின் முடிவில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணைகள், நடவடிக்கைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.