ஜீவனின் ஜீவிதம்!

Su.tha Arivalagan
Oct 27, 2025,01:48 PM IST

- மலர்விழி ராஜா


அன்பே  உனக்கு வேண்டுமானால் இறைவன் ஐந்தறிவை கொடுத்திருக்கலாம்......

ஆனால் நீ மனித இனத்தை விட மேலான மஹா ஆத்மா.....

எனது நிழலில் நீ வாழ ஆசைப் படுவாய்.....

என்னைப் பிரிந்தால் நீ

ஏங்கி தவிப்பதை நான் அறிவேன்......


உணவு தரவில்லை என்றாலும்  உன் அன்பினை அழகாக தெரிவித்தாய்.......

துணை யாருமின்றி தனிமையில் நான் வாடிய போதும்......

எனது முகம் பார்த்து உனது அன்பை தந்தாய்......

உன்னை விட உண்மையான அன்பை நானறியேன்......




நாயென  உன்னை ஏளனம் நினைக்கவில்லை.....

நான் அமரும் நேரம் காத்திருந்து ஓடி வந்து அருகே அமரும் உன் நினைவு.......

நெஞ்சம் கனக்கிறது.....

இதயம் வலிக்கிறது......


பிறப்பொன்று இருந்தால் மீண்டும் 

என்னிடம் வந்து விடு

செல்லமே.......


என்றும் உனது நினைவுகளில் எனது நன்றிகள் மலரட்டும்....

அன்பு பப்புவிற்கு சமர்ப்பணம்!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)