தலைவலிக்குதுடா, தலை வலிக்குதே.. கவலையே படாதீங்க.. சூப்பர் பாம் இருக்கு.. வீட்டிலேயே தயாரிக்கலாம்!
- ஷீலா ராஜன்
சென்னை: ஏகப்பட்ட ஸ்டிரஸ், ஏகப்பட்ட வேலை.. தலையெல்லாம் அப்படியே பாரமா இருக்கு.. பத்து பேர் ஏறி உட்கார்ந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு என்று புலம்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அப்படிப்பட்ட தலைவலி உங்களுக்கும் இருக்கா.. அதுக்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்குங்க.. வாங்க பார்க்கலாம்.
வீட்டிலேயே இந்தத் தைலத்தை சூப்பராக தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் பற்றிப் பார்ப்போம்.
ஓம உப்பு
புதினா உப்பு
பச்சை கற்பூரம்
கண்ணாடிபாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரம்
மரக் கரண்டி
மேற்கண்ட மூன்றுப் பொருட்களையும் சம அளவு வாங்கி அதனை ஒன்றாக கண்ணாடி பாத்திரத்தில் இட்டு மூடியை டைட்டாக மூடி நன்றாக குலுக்க வேண்டும்.. அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருந்து விட்டு பிறகு உபயோகிக்கலாம்.. அதிக காரம் என்று நினைப்பவர்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்..
இந்த கலக்கிய பொருளை, 2 அல்லது 3 துளிகள் கொதிக்கும் நீரில் விட்டு ஆவி பிடிக்கலாம்..
குளிக்கும் நீரில் சேர்த்து குளித்தால் உடல் வலி போயே போச்சு