Tamil Short story: உனக்கு உன் மகளே மேல்.. கலகலக்க வைத்த டாக்டர்!

Su.tha Arivalagan
May 23, 2026,11:49 AM IST

- பாரதிராஜன்


நாங்கள்  அம்பத்தூரில் 1994ல் வசித்த போது நடந்த நிகழ்ச்சி இது. என் மகளுக்கு 3வயது இருக்கும் போது  குழந்தைகளுக்கான ஊசி ஒன்றைப் போட்டு, அதனால் குழந்தையின்  இடது கை வீங்கி விட்டது. குழந்தையால் சாப்பிட  முடியவில்லை, தாங்கமுடியவில்லை,


ஒரே அழுகை என்ன செய்வது என்ற குழப்பம். இந்த சமயத்தில் ஊசி போட்ட டாக்டர் வெளியூர் சென்றுவிட்டார். எனக்கு குழந்தைகள் மருத்துவ நிபுணரான விஸ்வநாதன் நண்பர், அவரிடம் போன் மூலமாக விவரம் சொல்ல, அவர் குழந்தையை நுங்கம்பாக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ மனைக்கு  கொண்டு வந்து காண்பிக்க சொல்ல, நான் இல்லை, போனில் சொல்லச் சொன்னேன். அவர் முடியாது எனக்கூற நான் போனை வைத்து விட்டேன். 


கைபேசி வராதகாலம் அது. பிறகு  அம்பத்தூரிலுள்ள  வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்க அவர் கொடுத்த பவுடரை கைவீங்கி உள்ள இடத்தில்  தேங்காய் எண்ணெணய்யுடன்  தடவிய உடனே, சூரியனை கண்ட பனி போல விலகியது. அதன் பிறகு ஒரு திருமண நிகழ்வில், நான்,என் மனைவி, மகளுடன் சென்றிருந்தோம். அந்த திருமண நிகழ்வில் டாக்டர் விஸ்வநாதன் சாரும் வந்திருந்தார். 




அவரிடம் நான்போய் பேசி,என்  மனைவி, மகளை அறிமுகப்படுத்தினேன். டாக்டர் என் மகளிடம், அவளிடம், நீ குழந்தையாக இருந்த போது, உன்னுடைய காயத்திற்கு மருத்துவம் பார்க்க, உன்னை நேரில் அழைத்து வரச் சொன்னேன், ஆனால் உன் தந்தை உன்னை அழைத்து வரவில்லை என்ற போது, அப்ப என் வயதென்ன என்ற என்மகளிடம், நான் 3 வயது என்ற உடன், நான்சின்ன குழந்தை எனக்கு எப்படி ஞாபகமிருக்கும் என்றபடியே ஒடிவிட்டாள். 


அதாவது அந்த காலத்தில் அந்த மருத்துவமனைக்கு செல்லும் 10 குழந்தைகளில், 2 தான் திரும்ப நல்ல நிலையில் வரும்,  அதனால் தான்,நான் அழைத்து வரவில்லை என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதற்கு.பிறகு உன் மகளின் சாமர்த்தியமான பதில் நீயே மேல் என்றாகி விட்டது என்றாரே பார்க்கலாம். 


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)