நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

Meenakshi
Nov 08, 2025,05:07 PM IST
சென்னை: நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்விக்கு வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார். 

96, மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கவுரி கிஷன். இவர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. அப்போது ஹீரோ ஆதித்யா மாதவனிடம், ஹீரோயினை தூக்கி வைத்து நடனம் ஆடினீர்களே, அது எப்படி இருந்தது, ஹீரோயின் வெயிட்டா இல்லையா? என்று யூடியூபர் ஒருவர் கேள்வி கேட்டார்.  அதற்கு ஹீரோ சமாளிக்கும் வகையில் பதில் அளித்தார். 



இந்த கேள்வி கவுரி கிஷனை வெகுவாக பாதிக்க, மற்றொரு பேட்டியில் இது பற்றி பேசிய கவுரி கிஷன், ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார். செய்தியாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய யூடியூப்ருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,

ரெண்டு  நாளா மன உளைச்சலா இருக்கு. காரணம் கவுரி கிஷன் சம்பவம் தான். நான் ஒரு விதத்தில் கேட்டேன். அவங்க ஒரு விதத்தில் ஸ்டுப்பிட் மாதிரி கேட்காதீங்கனு சொன்னாங்க. பதிலுக்கு அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டேன். நான் அவங்கள உருவகேலி பண்ணல. ஜாலியா கேட்ட ேள்வி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவங்க மனச நோகடிக்கனும் என்ற எண்ணம் எனக்கில்லை. இதனால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தா அதுக்கு நானும் வருந்துகிறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.