வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை
சென்னை : இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த பரபரப்பான தேர்தல் முடிவுகளை தமிழகம் இன்று சந்தித்து வருகிறது. நொடிக்கு நொடி முன்னிலை நிலவரங்கள் மாறி வருவதால், வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க போவது யார்? தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆட்சி பொறுப்பேற்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பகல் 01.30 நிலவரப்படி, தவெக 105 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
திமுக - 68
அதிமுக - 64
என்ற நிலையில் உள்ளது. பகல் 1 மணி வரை தவெக 110 இடங்கள் வரை முன்னிலையில் இருந்தது. இதனால் தவெக தான் ஆட்சி அமைக்க போகிறது, 2வது இடம் யாருக்கு என்பதில் தான் அதிமுக-திமுக இடையே போட்டி என்ற பேச்சு ஏற்பட்டது.
ஆனால் 119 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் என்பது 5000 ஓட்டுக்களுக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் முடிவுகள் யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற நிலையே உள்ளது. ஏறக்குறைய 35 தொகுதிகளில் 500க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்திலேயே தவெக முன்னிலையில் உள்ளது.
தவெக இதுவரை தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எட்டவில்லை.தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு தவெக.,விற்கு இன்னும் 12 இடங்கள் தேவை. மற்றொரு புறம் 2வது இடத்தை பிடிக்க அதிமுக-திமுக இடையே மிகக் கடுமையான போட்டி நடந்து வருகிறது.
இதனால் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாமல் அரசியல் நிபுணர்கள் திணறி வருகின்றனர். அதேசமயம் தற்போதைய நிலையில், தவெக தலைமையில் புதிய ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.