சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி, 105 க்கும் அதிகமான தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. தவெக.,வின் பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சி துவங்கிய 2 ஆண்டுகளில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவ்வளவு அதிகமான இடங்களில் ஒரு அரசியல் கட்சி ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வெற்றியை பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
எம்ஜிஆர்., கூட கட்சி துவங்கி, 5 ஆண்டுகளில் தான் ஆட்சியை பிடித்தார். ஆனால் விஜய் பெற்றுள்ள இடங்களும், ஓட்டு சதவீதமும் எம்ஜிஆர் பெற்றதை விட மிக அதிகமாக உள்ளது. ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், இதுவரை பலமுறை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் எட்ட முடியாத அளவிற்கு தனிப் பெரும் கட்சியாக மாபெரும் வெற்றியை தவெக பதிவு செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
தவெக.,வின் வெற்றிக்கு என்ன காரணங்கள்.. இதுதான் இருக்க முடியும்

1. விஜய்யின் செல்வாக்கு- தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 30 முதல் 50 வயது வரையிலானவர்கள் தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக பெண்கள் விஜய்யின் தீவிர ரசிகர்கள். இதனால் விஜய்யின் செல்வாக்கு ஓட்டுக்களை அதிகம் பெற்று தந்துள்ளது.
2. விஜய்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் - கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் பிரச்சாரம், மாநாடு ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், பல இடங்களில் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்றவை மக்கள் மனதில், விஜய்யை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.
3. விஜய்யின் பேச்சுக்கள் - குடும்பத்தில் ஒருவனாக தன்னை முன்னிலைப்படுத்தி விஜய் செய்த பிரச்சாரம் மக்களிடம் பெரிதும் எடுபட்டுள்ளது. விஜய் தவறே செய்தாலும் பரவாயில்லை.. அவர் எங்க வீட்டுப் பிள்ளை என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்து விட்டது.
4. சாமானிய குடிமகனான கருத்து - சாமானிய குடிமகன் அரசுக்கு எதிராகவும், பழம்பெரும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கேட்க நினைத்த கேள்விகளை மக்களின் குரலாக இருந்து விஜய் மேடைகளில் பேசியது, யதார்த்தமாக தனது கருத்துக்களை பேசியது ஆகியவை மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
5. தனிப்பட்ட - அவதூறு விமர்சனங்கள் - அரசியலுக்கு அப்பாற்பட்டு விஜய்க்கு எதிராக திமுகவினர் பலர் முன் வைத்த தனிப்பட்ட விமர்சனங்கள், ஆபாச விமர்சனங்கள் ஆகியவை மக்களிடம் திமுக.,விற்கு எதிரான மன நிலையை ஏற்படுத்தி உள்ளது.
6. அரசியல் மாற்றம் - திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும் என மக்கள் நினைத்துள்ளது, அதிமுக-திமுக.,விற்கு எதிராக மனநிலை மக்களிடம் அதிகரித்துள்ளதும் தவெக.,வின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
7. அலட்சிய மனோபாவம் - திமுக கூட்டணியில் குறிப்பாக திமுகவில் பலரும் விஜய்யை தவறாக எடை போட்டு விட்டனர். அலட்சியமாக அவரை அணுகினர். குறிப்பாக விர்ச்சூவல் வாரியர்ஸ் எனப்படும் ஐடி விங், விஜய்க்கு எதிராக வைத்த பிரச்சாரம் திமுகவுக்கே திரும்பி விட்டதும் இன்னொரு முக்கியக் காரணம்.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}