தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Nov 06, 2026,01:42 PM IST
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியவிட்டுள்ள அறிக்கையின்படி, தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:


இன்றைய வானிலை நிலவரப்படி, 
தூத்துக்குடி, 
ராமநாதபுரம், 
புதுக்கோட்டை,
சிவகங்கை 
ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   

27 மாவட்டங்களில் மிதமான மழை:




அதேபோல், 
சென்னை, 
செங்கல்பட்டு, 
காஞ்சிபுரம், 
திருவள்ளூர், 
விழுப்புரம், 
கடலூர், 
மயிலாடுதுறை 

உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.   

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை:


தலைநகர் சென்னையில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, போரூர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், தியாகராய நகர் (தி.நகர்) மற்றும் எண்ணூர் ஆகிய முக்கிய பகுதிகளில் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையின் பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காலை நேர அலுவலகவாசிகளும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி சார்பில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:


கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும் போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், மின் கம்பங்கள் மற்றும் மரங்களின் அடியில் நிற்பதைத் தவிர்க்கவும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. நிலைமையைக் கண்காணிக்கச் சிறப்பு மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

news

அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!

news

தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்