சென்னை : தவெக அரசை கவிழ்க்க எம்எல்ஏ முஸ்தபாவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரை அடுத்து, அதிமுக பிரமுகர் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கடும் கண்டனமும், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர்.
பொய் வழக்கில் கைது:
அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் மன்னன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் மன்னனைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தவெகவின் அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "குதிரை பேரம் நடத்தி, அமமுக சட்டமன்ற உறுப்பினரைக் கடத்தி, கட்டாயக் கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சிதான் இந்த தவெக" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
"ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கடுகளவும் இல்லை":

அதிமுக நிர்வாகி மன்னன் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள நிலவரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், "பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம் அல்ல. குறுக்கு வழியில் குறுக்கு வழியைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கடுகளவுகூட எங்களுக்குக் கிடையாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"தவெக அரசு எவ்வளவு விரைவாகப் போகிறதோ..."
தொடர்ந்து தவெக அரசின் ஆட்சி நிர்வாகம் குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, "தவெக அரசு எவ்வளவு விரைவாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிப் போகிறதோ, அந்த அளவிற்கு தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலையும் சுதந்திரமும் கிடைக்கும். தவெக ஆட்சி அகற்றப்பட்டால் மட்டுமே நாட்டில் விலைவாசி குறையும், சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படும், மற்றும் சிறுமிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் தவெக அரசுக்கு எதிராக ஒரே நேரத்தில் இணைந்து வழங்கி வரும் இந்த அதிரடி பேட்டிகளும் அறிக்கைகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!
ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}