எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து பிரபலமான.. தாய்லாந்து நடிகை மரணம்!

Nov 04, 2026,03:49 PM IST

பாங்காக்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் பச்சைக் கிளி முத்துச்சரம் பாடலுக்கு இணைந்து ஆடிப் புகழ் பெற்ற தாய்லாந்து நாட்டு நடிகை மெட்டா ரூங்ரெட்டா தனது 83வது வயதில் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரைப் போக்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்து 1973-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்தத் திரைப்படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ரூங்ரெட்டா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


குறிப்பாக, டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா பாடிய "பச்சைக்கிளி முத்துச்சரம்..." என்ற சூப்பர் ஹிட் பாடலில் எம்.ஜி.ஆருடன் இணைந்து இவர் ஆடிய நடனமும், இவரது நடிப்பும் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளன.




தாய்லாந்து திரைத்துறையில் மிக மூத்த மற்றும் மதிக்கத்தக்க நடிகையாக விளங்கிய இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். தாராவதி துங்தாரா (Darawadee Duangdara) என்ற இயற்பெயர் கொண்ட இவர், ரசிகர்களால் அன்போடு 'நெங்' என்று அழைக்கப்பட்டார்.


கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பாங்காக் நகரில் உள்ள மின் புரி (Min Buri) பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரைப் போக்கிக் கொண்டுள்ளார். அவரது மறைவுக்கு தாய்லாந்து மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து பிரபலமான.. தாய்லாந்து நடிகை மரணம்!

news

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

news

தீபாவளி பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

My pet puppy

news

2027 உத்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு!

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.1,04,800-ஐ தொட்டது! அதிர்ச்சியில் மக்கள்

news

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்தால் வங்கிக் கணக்கில் ரூ.10 வரவு

news

பிறைநிலவு!

news

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்