சென்னை : கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக பிரபல எழுத்தாளர் பெருமாள்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
எழுத்தாளர் பெருமாள்முருகனின் குற்றச்சாட்டுகள்:
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில் பல்வேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார். அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னாட்டுத் தர ISBN எண்கள் போலியானவையாக உள்ளன. 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் ரூ.1,445-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பதிப்பகங்களில் அதே நூல்களின் விலை ரூ.350 மட்டுமே உள்ளது. மேலும், இந்த நூல்களில் பல்வேறு வரலாற்றுப் பிழைகளும், தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
'அகல்விளக்கு' என்ற பதிப்பகத்தின் 1,800 நூல்கள் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இருக்கும் தனக்கே அப்படி ஒரு பதிப்பகம் இருப்பது தெரியாது என்று தெரிவித்துள்ள அவர், முறைகேடுகள் மூலம் பணம் யாருக்குச் சென்றது மற்றும் எத்தனை நூல்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணைக்குழு அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
அரசின் விளக்கம் மற்றும் நடவடிக்கை:

எழுத்தாளர் பெருமாள்முருகனின் புகாரைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலக ஊழல் புகார் விவகாரத்தில் அரசு தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் அளித்துள்ள விளக்கத்தில், "பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் வாங்க கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணையை உடனடியாகத் தொடங்கியுள்ளோம். தவறுகளும் முறைகேடுகளும் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரத்தில் எழுந்துள்ள இந்த ஊழல் குற்றச்சாட்டுகளும், அதற்கு அரசின் உடனடி விசாரணையும் இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக.,விற்கு அதிகரிக்கும் சிக்கல் :
சமீபத்தில் தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து பார்வையிட்டு சென்றார். அப்போது, தவெக அரசிடம் இருந்து அறிவுலகம் தப்பித்து விட்டது என கூறி இருந்தார். இந்த சமயத்தில் திமுக ஆட்சி காலத்தில் பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்த விவகாரத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் ஒருவரே குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்பாராத புதிய ஊழல் விவகாரம் ஒன்று வெளியே வந்துள்ளது திமுக.,விற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!
ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து பிரபலமான.. தாய்லாந்து நடிகை மரணம்!
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
2027 உத்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}