Sasikala Viswanathan: சந்தோசம்.. ஒரு 50 நொடிக் கதை!

Su.tha Arivalagan
May 26, 2026,04:01 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அலைபேசி சிணுங்க; ‌ கணவர் காசிநாதனின் முறைப்பை அலட்சியம் செய்த  ஒப்பனையம்மா;  ஓடோடிச் சென்று அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தாள். 


"ஏம்மா! ரெண்டு தரக்கா " ஃபோன் போட்டுருக்கே!  அங்கிட்டு  எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க" என்று கேட்டவனின் பேச்சை பாதியில் மறித்தாள்;  ஒப்பனையம்மா. 


இல்லேடா! குமரா! ஏது கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்,  கணக்கிலே வரவு வெச்சுருக்காங்க பாங்க் பொஸ்தகத்துலே. கூடுதலாக பணம் அனுப்பி யிருக்கியா? சந்தோசம்"  என்று மகிழ்ச்சியுடன் சொன்ன அம்மாவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கீழே போய்க்கொண்டு இருப்பதை எப்படி விளக்குவது; என்று தெரியாமல் , விழித்தான் பாஸ்டனில் வேலை பார்க்கும் குமரன். 




சடாட்சரம், ஓப்பனையம்மாவின் அறியாமை கண்டு தலையில் அடித்துக் கொண்டு, "அவளுக்கு பத்து வாட்டி விளக்கியாச்சு. விடு; அத்தோடு. சந்தோச பட்டு கிடட்டும்" என்றார் மகனிடம்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)