கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!

Su.tha Arivalagan
Sep 01, 2026,03:14 PM IST

- பசுங்கிளி


கரிய நிற காகமே 

உன்னை எனக்கு பிடிக்கும்


ஏன் என்றால் நீயும் கருப்பு 

நானும் கருப்பு


என் ஆசை மாமனும் கருப்பு

என் இஷ்ட தெய்வம் கண்ணனும் கருப்பு


என் குலதெய்வமும் கருப்பு

எனக்கு பிடித்த பாடல்

காக்கை சிறகினிலே நந்தலாலா

நின்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா


உன்னை முன்னோர்கள் என்று கூறி அனைவரும்

அமாவாசையில் உனக்கு உணவளிப்பார்கள்

நான் உன்னை நண்பனாக நினைக்கிறேன்

அதனால் உனக்கு தினமும் உணவும் நீரும் தருவேன்




காகா என்று கரைந்து என் வீட்டிற்கு

வரும் விருந்தினரை எனக்கு முன்னாடியே கூறுகிறாய்


சில நேரங்களில் காகா என்று கரையும் போது

என்னை அக்கா என்று அழைப்பது போல இருக்கும் 


வெளியில் வந்து பார்த்தால்

நீ உன் தலையை சாய்த்து என்னை

ஒரக்கண்ணால் பார்ப்பாய்


நான் பாசத்தோடு உனக்கு சாதமும் நீரும் வைக்க

நீ பயப்படாமல் என் முகம் பார்த்து நிற்பாய்

அதனால் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்


மீண்டும் மீண்டும் வா காகமே

காத்திருப்பேன் உனக்காக!