மறக்க முடியுமா!

Sep 01, 2026,10:36 AM IST

- விஜயா


ஒரு அழகான கிராமம்.. கொடுங்கலூர் என்று பெயர். அந்த கிராமம் மிக அழகாகவும் பசுமையாகவும் இருக்கும். பறவைகள் சங்கீதமும் காற்றின் ஓசையில் பூக்களின் நறுமணமும் வீசிக்கொண்டு இருக்கும். வயல் வெளியில் பசுமையான நெற்பயிர்களின் பால் போன்ற வாசனை வீசும். அந்த அழகான அந்த கிராமத்தை சுற்றிலும் ஆறு போன்ற தண்ணீர் சுற்றி சூழ்ந்து இருக்கும். சிறுவர்கள் வாலிபர்கள், அந்த ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். மாடுகளும், ஆடுகளும் சேர்ந்து குளித்து கொண்டு இருக்கும். ஆனந்த குளியலில் மகிழ்வார்கள். வயதானவர்கள், உடல் பலம் இல்லாதவர்கள் அந்த ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். அன்பும் பாசமும், கள்ளம் கபடு இல்லாத மக்கள்.


ஒருவர் வீட்டில் சமையல், நான்கு ஐந்து குடும்பங்கள் சேர்ந்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு கிராமம் தான் கொடுங்கலூர். அந்த கிராமத்திற்கு வெளியூரில் இருந்து விருந்தாளி வந்து விட்டால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு சாப்பாடு மற்றும் ஆடைகள் பல உதவி செய்து அவர்களுக்கு தேவைகள் செய்து உபசரித்து அடைக்கலம் தரும் ஊர்தான் எங்கள் கொடுங்கலூர் ஊர். 


அப்படி பட்ட கிராமத்தில் தான் பிறந்தேன். என் பெயர் ஜெயா. மறக்க முடியுமா என்ற தலைப்பினை தந்து என் வாழ்க்கை வரலாற்று உண்மையாக நடந்த கதைத்தான் நான் உங்களுக்கு சமர்பிக்க நினைக்கிறேன். என்னுடைய பல உண்மைகள் உங்கள் மனதை தொடும் என்று நம்புகிறேன்.


கிராமத்தைப் பற்றியும், அதன் மனிதர்கள் குறித்தும் சொன்னேன்.. இனி என் கதை தொடங்குகிறது.. நீங்களும் தொடருங்கள்.




என் வீடு கூறை வீடு, என் வீட்டைச் சுற்றிலும் மாமரம், தென்னை மரம், பனை மரம், புங்க மரம், விளா மரம், பூ செடிகள் நிறைந்து குடிசை வீட்டின் முன் அழகாக இருக்கும். சுற்றிலும் தட்டி அடைத்து ஒரு பங்களா போல் என் வீடு அழகாக இருக்கும். மாட்டு சாணம் போட்டு வீட்டை மெழுகி கோலம் போட்டு மண்ணெண்ணை விளக்குத்தான்.. என்று கிராமத்து வாசம், கோவில் போல் இருக்கும் என் வீடு.


எனக்கு ஐந்து அத்தைகள், ஒரு பெரியப்பா.


என் அம்மா, அப்பா, நான் மூத்தவள், எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள், தாத்தா பாட்டி அனைவரும் அனைவரும் மொத்தம் எட்டு பேர், அந்த அழகிய வீட்டில் வசித்து வந்தோம்.


பசி என்றால் என்ன என்று தெரியாமல் என் அப்பா வேலைக்கு போவர். மாலையில் வரும் போது எங்களுக்கு தேவையானதை வாங்கி வருவார். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனக்கு - 9 - வயது, இருக்கும் என் தம்பிக்கு 7 - வயது, (2) வது தம்பிக்கு 5 - வயது, என் தங்கைக்கு 3 - வயது இருக்கும் போது என் அப்பா இறந்து விட்டார்.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்