- இரா. மும்தாஜ் பேகம்
வாழ்க்கை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்க ஆயிரம் உறவுகள் அருகில் இருக்கத் தேவையில்லை.நமக்கு உண்மையாக இருக்கும் ஒரு உறவு இருந்தாலே போதும்.
கோபத்தில் குரலை உயர்த்தக் கூடாது. வார்த்தைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மலர்கள் மலர்வது மழையால் மட்டுமேயன்றி இடியாலோ மின்னலாலோ அல்ல.
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால் வேறு எந்த உறவும் நமக்கு தேவையில்லை.
தங்கத்தில் செய்த தேராக இருந்தாலும் தேவை முடிந்ததும் ஓரமாக தான் நிறுத்தி வைப்பார்கள் அது போல தான் சில உறவுகளும்.
பொய் பேசினால் மட்டுமல்ல, சில நேரங்களில் உண்மை பேசினால் கூட உறவுகள் உடைந்து போகும்.

செரிக்காத உணவை சேர்த்தால் அது உடலுக்கு கேடு தரும் அதுபோல, நிலைக்காத உறவை நினைத்தால் அது உள்ளத்திற்கு கேடு தரும்.
தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பிற்கும் சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம்இருக்கும்.
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும், யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான உறவு.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}