- விஜயலக்ஷ்மி கண்ணன்
பூமியின் கோபம்
யாரைத் திருத்திடவோ?
வானத்தின் ஆர்ப்பாட்டம்
யாரை நிலைப்படுத்த?
இடர்கள் பலவும் கண்டோம்
பேர் இடர்களும்
கண்டு கொதித்தோம்!
மாண்டவர்கள் பலர்
மண்ணோடு புதைந்தவர்கள் பல நூறு
மீண்டவர்கள் ஒரு சிலரே!

இயற்கையின் நியதியை
செயற்கை முறை கொண்டு
எதிர்த்தால்
நடக்கும் விபரீதம் நில
நடுக்கம்
அடக்க முடியா கோரத் தாண்டவம்!
மனிதன் மனம் மாறினானா?
தர்மம் எனும் பாதையில் நடந்தானா?
கொடுமைகள் நிறுத்தினானா?
பிறர் சொத்தை கொள்ளையடித்தான்.
பிறர் மனைவியை அபகரித்தான்.
குள்ளநரி வேஷம் போட்டான்.
குல்லா போட்டு
நோகடித்தான்.
அன்னையின் கோபம்
அவன் கண்டு கொள்ளவில்லை.
அவனும் கண் எதிரே காணாமல் போய் விட்டான்.
நீதிக்கு கண் இல்லை!
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}