- பாரதிராஜன்
கமலாப்பாட்டி: இவர் என் அம்மாவின் பாட்டி. கூன் முதுகு உடையவர். கணவர் காலமானதும் அந்த கால வழக்கப்படி தலை மொட்டை அடிக்க ப்பட்டு நார்மடிபுடவை உடுத்தி வாழ்ந்து வந்தார். இவரின் இரண்டு காலிலும் ஆறு விரல்கள் இருந்தது. இவர் அதிர்ந்து பேசி பார்த்ததேயில்லை.
அரிசி என்று சொல்ல மாட்டார் ஏனென்றால் சிஎன்பது சிவனை குறிப்பது என்று அமுந்திரி என்றே சொல்லுவார்.
தன் இரு மகன், மகள்கள் வீட்டில் மாறி மாறி வாழ்ந்து வந்தார். அவரின் பெரிய மகன் சென்னை வாசம், சிறிய மகனும் கிராமத்தை விட்டு சென்னைக்கு வர,இருமகன்கள் வீட்டிலும் மாறி மாறி வசித்து பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக இருந்தார். ஒரு அட்சயதிதி அன்று இறைவனடி சேர்ந்தார்.
பட்டாசித்தி: இவர் சிறிய வயதிலேயே விதவையானார். இவரும் தலை சிகை நீக்கி வெள்ளைப்புடவை கட்டி வாழ்ந்து வந்தார். பட்டா சித்தி என்ற பெயர் எப்படி வந்தது தெரியாது. ஆனால் கிராமத்தில் எல்லாரும் இவரை பட்டாசித்தி என்றே அழைப்பார்கள். நல்ல உபகாரி, நன்றாக பேசுவார்.

எங்களுடைய கிராமத்தின் பெயர் சொரையூர் இது வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. பிரபல எழுத்தாளரான சாவியின் ஊரான மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து 6 கி.மீ. என் தந்தை சென்னை மயிலாப்பூரில் வசித்த போது கூட வந்து தங்கி சமையல் செய்து போட்டார். குடியிருந்த கோயில் சினிமாவில் நாகேஷ் ஒரு பாட்டி வேடம் போட்டு அவருடைய தந்தை விகேராமசாமியை ஏமாற்றுவார் அந்த வேடத்தை நினைவில் கொள்ளுங்கள்.
பட்டாசித்தி மயிலாப்பூரில் மிஷனில் அரிசியில் சில்லறைப்போட்டு எடுத்துப்போவார். ஆனால் மிஷனில் அப்படியே அரைக்கக் கொடுத்து விடுவார். அதுமாதிரி நிறைய காசு உடைந்த நிலையில் இருக்கும். இவரும் 1976ல் காலமானார்.
பத்தாணி பாட்டி என்கிற கே.சி.ராஜலஷ்மி: இவர் என்னுடைய பாட்டி. கமலாப்பாட்டி யின் பெண். இவர் கைவேலை நிறைய செய்பவர். ஒரு பாட்டிலில் மணிமூலமாக பொம்மைகள் செய்வார். பாட்டிலின்வாய்ப்புரம் குறுகலாக இருக்கும் அதனுள் மணியை போட்டு கைவேலை ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
அடுத்ததாக மணியில் ஹ்ருதயக்கமலக்கோலம் செய்து அதனை பிரேம் போட்டு மாட்டிவைத்தார் வீட்டில். என்தாத்தா ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆனால் ஒய்வுதியம் வாங்காமலே காலமாகி விட்டார்.
இந்த நிலைமையில் பாட்டி வீட்டில் நான், என்தம்பி, என்சகோதரன் மூன்று பேர். அனைவரையும் நன்கு அரவணைத்துச் சென்றார். ஒருவழியாக என்பாட்டிக்கு ஒய்வூதியம் ஏப்ரல் 1972முதல் 1973பிப்ரவரி வரை மாதம் ரூ. 30/_ஒய்வூதியம். அதுவும் இவர் விதவை என்பதால் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழில் கையொப்பம்.
அதுவும்காஞ்சீபுரம் கரூவூலம் சென்று காலை 9 மணிக்கு போனால் மாலை 6 மணிக்கு தான்வருவார்.
அதனை என் பாட்டிக்கு சொல்வதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அதன்பிறகு அவரின் மாப்பிள்ளை மாநில கணக்காயர் அலுவலகத்தில் போராடி ஒய்வூதியம் வாங்கிக்கொடுத்தார். இவரும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு நிறைய நிறைய உதவி செய்தவர். எங்களுடைய பாட்டி வீட்டில் யார் வந்தாலும் சாப்பிடாமல் போக மாட்டார்கள். குறைந்த பட்சம் காபி,அதிகபட்சம் சாப்பாடு.
இவர் ஒரு முறை ரோட்டில் நடந்து சென்ற போது வண்டி மோதலால் ஏற்பட்ட காயம் வயதானதால் அதனை தாங்க இயலவில்லை. 1996ல் காலமானார். மூவரும் நல்ல பாட்டிகள்!
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
{{comments.comment}}