- பாரதிராஜன்
ரேகா ஒருதலைமைச்செயலக பணியாளர். மணமாகி கணவர் ராகவ் காவல்துறை விஜிலன்ஸ் காவலர். ஒருமகன், மகள் பள்ளிக்குழந்தைகள்,வாசம் அம்பத்தூரில். மாமனார், மாமியார் வீடு விழுப்புரம். ஞாயிறன்று விழுப்புரத்தில் ஒரு விசேஷம்,அதற்காக ரேகாவின் கணவர், குழந்தைகள் முதலில் சென்றுவிட்டனர்.
ரேகா துறையில் வழக்கு தொடர்பாக சில தகவல்களை சேகரித்து மேலதிகாரியிடம் சமர்ப்பிக்க தாமதமாகி சுமாராக 8 மணி அளவில் தாம்பரம் வந்து விழுப்புரம் பேருந்துக்காக காத்திருந்த போது வாரக்கடைசியால் எல்லா பேருந்துகளும் நிற்காமல் சென்றது
அந்த சமயத்தில் அவசர அவசரமாக ஒடி வந்த பெண், ரேகாவைப்பார்த்து அக்கா, அக்கா என் போன் சார்ஜ் இல்லாததால் பேச முடியாத நிலை, உங்களுடைய போனைக்கொடுங்க ப்ளீஸ் என்றாள். அந்த பெண்ணின் வயது 20க்குள் இருக்கும், ரேகாவும் சரி எனத்தர, அந்த ப்பெண் கொஞ்சம் தள்ளிப்போய் பேசி விட்டு போனை ரேகாவிடம் கொடுத்து விட்டு நன்றி நன்றி என்று சொல்லி விட்டு போய் விட்டாள்,போனை வாங்கிய ரேகா, விழுப்புரம் பஸ்,வரவும் ஏறி காலியாக உள்ள இடத்தைதேடி அமர்ந்து டிக்கட் வாங்கினாள்.

ரேகா விழுப்புரம் வந்ததும் இறங்கினாள். பஸ் ஸ்டேண்டில் கணவன் இருக்க இருவரும் பேசியபடியே வீடு வந்து சாப்பிட்டு தூங்கச்சென்றனர்.
அதிகாலை 5 மணிக்கு போன் அடிக்க, ரேகா நல்ல தூக்கத்தில் இருந்ததால் அவள் கணவன் போனை எடுக்க, எதிர் முனையில் பேசியவர், நான் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றார். இவர் என்ன விஷயமாக என்றதும் சார் நேற்று இரவு 8 மணிக்கு யாருக்கு போன் செய்தீங்க என்றதும், கணவன் சார், இது என் மனைவி ரேகா போன் அவள் இப்ப தூங்கிட்டிருக்கா என்று சொல்ல, சார் இங்கே ஒரே பிரச்சினை என்றார்.
கணவன் சார் நானும் ஆலந்தூர் காவல்துறை விஜிலன்ஸ் அதிகாரி என்ன விஷயம் சரியாக சொல்லுங்க என்றார், அதற்குள் ரேகா எழுந்து விட, போனை வாங்கிய ரேகா தாம்பரம் காவல் அதிகாரியிடம், தாம்பரம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் போன் வாங்கி பேசினாள், யாருக்கு பேசினாள் என்ற விவரம் எனக்கு தெரியாது.
அதற்கு காவலர் மேடம் அந்த ப்பெண் கடைசியாக உங்களுடைய போனில் பேசி பிறகு காணவில்லை என்றார். உடனே ரேகாவின் கணவர் சார் என் மனைவி அவசரம் என்றதால் போனை கொடுத்திருக்கிறாள், வேறு எதுவும் தெரியாது என சொல்லி போனை வைத்தார்.
சென்னைக்கு வந்ததும் தாம்பரம் காவல் நிலையம் சென்று விசாரித்ததில் அந்த பெண்கிடைத்த விவரம் தெரிந்தது. ரேகா, இனி மேல் யார் கேட்டாலும் போனைக் கொடுக்காதே என்றார். உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டியது இது தானோ?
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
எனக்கும் கடிதம் வந்தது!
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
{{comments.comment}}