ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!

Aug 29, 2026,12:09 PM IST

தேவகோட்டை: தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டு, அஞ்சல் துறையின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு சேவைகள் குறித்து நேரில் அறிந்து கொண்டனர்.




பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்களப்பயணத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி வீரபாண்டியன் மாணவர்களை வரவேற்றார்.




அஞ்சலகத் துறையின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள், அஞ்சல் அனுப்பும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து அஞ்சலக உதவி அதிகாரி செல்வராஜ் மற்றும் அஞ்சலக அலுவலர்கள் மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.




தொடர்ந்து, மாணவர்களிடம் அஞ்சல் துறை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் அஞ்சலக சேவைகள் குறித்து ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.




களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஆர்த்தி, சிவரஞ்சனி மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!

news

ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!

news

ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்

news

Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!

news

தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை

news

சிந்தனைச் சிதறல்.. தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதே ஆபத்தானது!

news

தலை சீவி பொட்டு வச்சு தாலிக்கு மஞ்சள தொட்டு வச்சு!

news

அண்ணன்.. காலம் நல்கிய அற்புதப் பரிசு!

news

ஜொலிக்கும் நட்சத்திரங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்