- அ.தாமஸ்
எந்த ஒன்றையும் தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் ஆபத்தானது. ஒரு விடயம் தெரியாது என்று சொல்வதற்கும் அதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும் தானே.
தெரியாத ஒன்றைத் தெரியாது என்று சொல்வதற்குத் தாமதிக்க வேண்டாம். தெரியும் என்று சொல்லித் தடுமாறுவதைவிட, தெரியாது என்று சொல்லித் தடம் மாறுவதைத் தவிர்ப்பது சிறந்தது.
எல்லாம் தெரியும் என்பதும், எதுவுமே தெரியாது என்பதும் ஆபத்தானவை. தெரிந்ததைத் தெரிந்தது என்றும், தெரியாததைத் தெரியாதது என்றும் வெளிப்படைத்தன்மையோடு அறிவிப்பது ஆரோக்கியமானதே.

எனவே, தெரிந்ததைத் தெளிவாகச் சொல்வோம்; தெரியாததை விரைவில் தெரிந்து கொள்வோம். பிறர்க்கும் நாம் தெரிந்ததைத் தெளிவாகச் சொல்வோம்.
தெரியும் என்பதை விட, தெரியாது என்பதுதான் நம்மைக் காக்கும் ஆகச்சிறந்த ஆயுதம். அது நம் செயல்களில் தவறாமல் இருப்பதற்கான எச்சரிக்கை மணி. எந்த ஒன்றையும் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தெரியாமல் தடுமாறுவதைவிட தெரியாததைத் தெரியாதது என்று சொல்லிவிட்டு, தெளிந்து செயல்படுவது மேலானது.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}