- ஆனந்தி.ச
என் வகுப்பில் நட்சத்திரங்களாக ஜொலித்து வருபர்கள் .R கவிப்பிரியா S ஹர்ஷினி .S சஹானா P கீர்த்திகா K R கிருத்திகா .. எல்லா பாடங்களிலும் சரி கல்வி இணை செயல்பாடுகளானாலும் சரி தயங்காமல் உடனே ஆர்வத்துடன் செய்து முடிப்பவர்கள். எல்லா போட்டிகளிலும் பங்கேற்பது மட்டுமல்லாமல் பரிசுகளையும் அள்ளி வருபவர்கள்.
தாங்கள் மட்டும் நன்கு படிப்பதல்லாமல் வகுப்பில் உள்ள அனைவரும் தம்முடன் சேர்ந்து முன்னேற வேண்டும் என நினைக்கும் தேவதைகள். வகுப்பில் நடத்தப்படும் செயல்பாடிகளில் மாணவிகள்தான் வெற்றி பெற வேண்டும் என உறுதியாக இருப்பவர்கள்.. அதற்கென சக மாணவிகளை தயார்படுத்தவும் செய்வார்கள். வழக்கமாக பள்ளியிலிருந்து ஏதாவது பட்டறைகளுக்கோ அல்லது சில நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களை வெளியில் கூட்டிச்செல்வது வழக்கம்.
முதல் வாய்ப்பு இவர்களை போன்ற மாணவர்களுக்கே வழங்கப்படும் .. பல்வேறு வகுப்புகளிலிருந்து மானவர்களின் பெயர்பட்டியல் கேட்டாலும் அவர்கள் தருவதும் இவர்களை போன்ற மாணவர்களைத்தான்.. 24/08/ 2026 அன்று விஐடி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Air and space என்ற கண்காட்சியில் பங்கேற்க எம் பள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது..50 மாணாக்கர்கள் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பெயர்பட்டியல்கள் கோரப்பட்டன.

வழக்கம் போல் என் வகுப்பிலிருந்து இந்த ஐந்து மாணவிகளின் பெயர்களையும் நான் பரிந்துரைத்தேன். பெயர்கள் எழுதப்பட்ட சில நிமிடங்களில் அம்மாணவிகளிடம் சலசலப்பு. என்ன அங்கே சத்தம் ? என்றபடியே நான் நிமிர ஒருவரை ஒருவர் பார்த்தபடியே ஐவரும் எழுந்து என்னை நோக்கி வந்தனர்.
"மாம் அடிக்கடி நாங்க வெளியில போற வாய்ப்பு கிடைக்குது போறோம் இந்த முறை .. இந்த ஐந்து மாணவர்களை கூட்டிட்டு போங்க .. அவங்களும் வெளியில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிப்பாங்கல்ல “ என்று ஒன்று போல சொன்னதும் .. நான் அப்படியே திகைத்து , என்ன நிஜமாவா சொல்றீங்க எனக் கேட்கவும் .. ஆமாம் எனச்சொல்ல .. எனக்கோ ஆனந்த கண்ணீர் கண்களில். பெரியவர்களில் சிலருக்கே இந்த மனம் இல்லை .. இவர்கள் ஐவருமே எட்டாம் வகுப்பு தான் படிக்கிறார்கள் . இவர்களுக்குள் இத்தனை நல்ல எண்ணங்களா? என வியந்தேன்.
வள்ளுவரின்
“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்” என்ற குறளின் பொருளுக்கேற்ப,
“சுயநலமின்றி, தன்னிடம் உள்ள நல்ல விஷயங்களும் மகிழ்ச்சியும் பிறருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று நினைப்பதே உண்மையான கல்வியறிவு பெற்றவர்களின் முதன்மைப் பண்பாகும். என்பதை நிரூபித்த அம்மாணவிகள் நிஜமாகவே ஜொலிக்கும் நட்சத்திரங்கள் என்று உணர்ந்தேன் , உங்களுடன் பகிர்ந்தேன்.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அ மே நி பள்ளி , கண்டிகை, செங்கல்பட்டு)
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}