- கவிஞர் பி.எஸ் முருகேசன்
கடன்மேல கடன வாங்கி
காளமாடு ரெண்டு வாங்கி
காடு வயல் உழுதும்
இங்கே கவலை தீரலே
களனி எங்கும்
விளைய வச்சும் கடனும் தீரலே (கடன்மேல)
வாங்க வாங்க கடனும்
இங்கே வளர்ந்து போகுது
வரவு எல்லாம்
வட்டிக்குள்ள
முடங்கிப் போகுது
ஊருக்கெல்லாம் உணவு தரும்
உழவன் பசி தீரலே
பாடுபட்டு பாடுபட்டும்
பலனும் ஒன்னுமில்ல (கடன்மேல)

வானத்தை நம்பி
வரகு வெதச்சோம்
வானம் மழை பொழியலே
வாடிப்போகும் பயிரு
மீட்க வழியும் தெரியலே
மாற்றம் எப்ப
நிகழும் என்று
விடையும் புரியலே (கடன்மேல)
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}