- சசிகலா விஸ்வநாதன்
காயத்ரி பல் மருத்துவர் கொடுத்த பில் தொகை ஐம்பதினாயிரம் கண்டு அசந்து போய்விட்டாள். வயதான தந்தையின் பல் வைத்தியத்திற்காக வந்திருந்தாள். மேல் வரிசை பற்களுக்காக ஆறு மாதங்களுக்கு முன்தான் இருபத்தைந்தாயிரம் செலவழித்து சிகிச்சை நடந்தது.
முன்பற்கள் இரண்டு தவிர மீதி பற்கள் அனைத்திற்கும் பல் செட் கட்டப்பட்டது. அதில் ஒரு விரிசல் வர திரும்பவும் பல் மருத்துவரிடம் போக; அவை இரண்டும் பலமில்லாமல் இருப்பதால் எடுத்துவிட்டு லேசான உலோகத்தில் மொத்தமாக புது பல் செட் தயார் செய்து தருவதாகவும் அதற்கு இருபது வருடம் உத்திரவாதம் தருவதாகவும் சொல்கிறார்.
பழைய பல் செட்டையே பழுது பார்த்து தர வேண்டினேன். முன்பற்களை இதில் ஒட்டி சேர்க்க முடியாது; என்று திட்டமாக சொல்லவும்; என் அப்பா," வேண்டாம் காயத்ரி! முன்பற்கள் சிகிச்சையே இப்போது வேண்டாம். பழசை ஒக்கிட்டுத் தர சொல்லு. அதிலேயே நான் சமாளித்துக் கொள்கிறேன். முன் பற்கள் தொந்தரவு கொடுத்தால், அந்த சமயம் பார்த்துக்கலாம். என்று என் பளுவைக் குறைக்க முன்வந்தார்.

நான் மருத்துவரிடம்," மேடம்! ஆறு மாதங்களுக்கு முன்தான் இருபத்தைந்தாயிரம் செலவழித்தேன். அதற்குள் அது விரிசல் கண்டு விட்டது. அந்த சமயமே சொல்லியிருந்தால் இவ்வளவு செலவு வந்திருக்காது" என்றேன்." என்னம்மா; இப்படி பேசுகிறாய். நான்தான் அப்போதே சொன்னேனே எல்லா பற்களுக்கும் சேர்த்து கட்டிடுங்க; என்று; நீங்கதான் கேட்கவில்லை." என்றார்.
"மேடம்! கொஞ்சம் குறைச்சுக்கங்க. மேலும் மூன்று மாதம் அவகாசம் கொடுங்க மூன்று தவணைகளில் கொடுத்து விடுகிறேன்" என்று சற்றே தணிவாகக் கேட்தற்கு," என்னம்மா! இப்படி தொந்தரவு தருகிறாய். பல்செட் பொருத்திக் கொடுத்தததுக்கப்புறம் உன் பின்னால் அலைய முடியுமா? அதெல்லாம் சரி வராது. நீங்கள் வேறு மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கறாராக பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரது அலைபேசி அழைக்க, ஃபோனைக் காதுக்கு ஒத்தி பேச ஆரம்பித்தார்.
'' என்ன, சார். இப்படி சொல்கிறீர்கள்! உடனே அத்தனை பெரிய தொகையை நான் எப்படி ஏற்பாடு செய்ய முடியும். ஒரு ஆறு மாத அவகாசம் கொடுங்கள். நான் தவணையில் கட்டி விடுகிறேன். என் கஷ்டத்தையும் சற்று புரிந்து கொள்ளுங்கள்" என்று நயமாகப் பேசினார். எதிர்பக்கம் இருந்தவர், என்ன பேசினாரோ, நான் அறியேன்." தேங்க்ஸ்; சார். வரும் சனவரிக்குள் கண்டிப்பாக தவணை முடித்துவிடுவேன். பாதி தொகை முன்பணம் கட்டி விட்டேன், சார். நோ ப்ராப்ளம். கண்டிப்பாக; ஷ்யுர்; சார்! மெனி தேங்க்ஸ் , சார்" என்று ஃபோனை மலர்ந்த முகத்துடன் வைத்தவர், என்னைப் பார்த்தார்.
என்ன தோன்றிற்றோ, அவருக்கு. "சரிம்மா! நான் ஐந்தாயிரம் குறைத்துக் கொள்கிறேன். மருத்துவ செலவிலும் ஐந்தாயிரம் தள்ளுபடி செய்கிறேன். நான்கு மாதங்களில், மாதம் பத்தாயிரம் கொடுத்து விடுகிறாயா," என்று அன்புடன் சொல்லியது; எனக்கு ஒரு ஆச்சரிய அதிர்ச்சியை கொடுத்தது; எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததை என் முகமே அவருக்கு உணர்த்தியது.
தலைவலியும் காய்ச்சலும் தனக்குத்தானே வந்தால்தான் தெரியும் என்பது உண்மையாயிற்றா?
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
சிந்தனைச் சிதறல்.. கிடைப்பதைப் புசிப்போம்; பசியினை முற்றாய் மறப்போம்!
Short Story: தனக்கு வந்த தலைவலி
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
Short Story: உதவியால் வந்த தொந்தரவு!
என் நினைவெனும் கோயிலில் நீதான் இருக்கிறாய்
எம்பெருமான் உருவாக்கிய தாமரைத் தடாகம்.. திருநாவுக்கரசர் வரலாறு.. 10!
Motivational Monday: நிச்சயத் தீர்ப்புகள்.. மௌனம் காவாதீர்; பதில் பகருங்கள்!
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
{{comments.comment}}