பாந்தமாய் ஒளிரும் கயல் விழிகள்.. சிறு கீற்று போல புருவ ஜாலம்!
Mar 26, 2026,03:58 PM IST
- வ.துர்கா தேவி
நிலவின் முதல்
ஒளித்தடம்
பதித்தது போல்
மெல்ல மின்னும்
சின்ன நெற்றி
சிற்பியின்
விரல்கள்
செதுக்கியது போல்
கூர்மையான நாசி
லோலாக்கு
இன்றியும்
கவிதை எழுத
தூண்டும்
மெல்லிய காதுகள்
பாந்தமாய் ஒளிரும்
கயல் விழிகள்
சிறு கீற்று போல
புருவ ஜாலம்
சுடிதாரில் மட்டுமல்ல,
தாவணியிலும்
மின்னும் சொர்க்கம்
மேக ஊர்வலமாய்
அலைபாயும்
கருங்கூந்தல்
வேகத்தையோ
வேகத்தடையையோ
எல்லாம் மறந்து
வண்டியில்
வேகமாய் செல்லும்
இத்தனையும்
காண தவறுவதில்லை
என் கண்கள்
ஆம்....
மருமகளை
தேடும் காலம்
வந்து விட்டது!
(About the Author: Durgadevi V, Graduate Teacher, GHS Nesal, Tiruvannamalai District)