- க. யாஸ்மின் சிராஜூதீன்
முயற்சிகள் தோற்றுப்போகலாம்
அது தற்காலிகமே தவிர நிரந்தரமல்ல.....
முயற்சிகளை விட்டுவிடுவதுமில்லை....
தோல்விகளை நாம்
சந்திக்கலாம் ஆனால்
தோற்றுக்கொண்டே இருப்பதில்லை ......
வெற்றி பெறும் வரை இளைப்பாறுவதுமில்லை...
முயற்சிகளின் சறுக்கிய ஒரு படி தான் தோல்வி
அதனால் விளைந்த கற்றலில் விளைந்தது தான்
வெற்றிப் படிக்கட்டு ....
தோல்வி வெற்றிக்கு பலமான பாலம் அமைத்துக் கொடுக்கும்
என்றும் விழாமல் உறுதிபெற....
தோல்வியைக் கண்டு தளராதே ..
முயற்சி செய்யத் தயங்காதே....

முயற்சி பயிற்சியாகும்
தோல்வி நல்வழிகாட்டியாகும்..
என்பதை மறவாதே.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}