குழந்தை அல்ல.. கவிதை!

Su.tha Arivalagan
Nov 14, 2025,04:01 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


விண்ணில் எழுந்து மண்ணில்.....

விளைந்த நட்சத்திரம்.....

ஆழ்  கடலில் விளைந்து அழகாய்.....

ஜொலிக்கும் முத்துச்சரம்....


ஆயிரம் அழகு கொட்டிக் கிடக்கும்

கவிதைப் பெட்டகம்..... 


வாழ்க்கை என்னும் நந்தவனத்தில்...

நறுமணம் வீசும்தென்றல்.... 


அள்ளி அணைக்கையில்

ஆனந்த சொர்க்கம் ....




பிஞ்சு அடி எடுத்து நெஞ்சில்......

நடனமிடும் அழகு மயில்....


தாழம்பூ வின் வாசம் 

உனது சுவாசம்.....


மெது மெதுவாய் 

அருகில் வந்து.....


ரோஜா இதழின் பனித்துளியாய்.....


கன்னத்தில் நீ கொடுக்கும்....


முத்தத்தின் சத்தமில்லா ஈரம்.....


பட்டு உடலில் பல 

வர்ண ஜாலம் .......


தத்தி தத்தி நடக்கையிலே.....


அசைந்து வரும் 

ஆழி தேர்......


கொஞ்சும்  மொழி பேசுகையில்.....


செந்தமிழில் மலர்ந்த  கவிச்சோலை.....


இதழ் விரித்து நீ பேசும்

அத்தனையும்....


அழகான புது கவிதை....


கள்ளமற்ற உனது 

சிரிப்பழகு.....


கடவுள் தந்த சொர்க்கம் நீ மட்டும் தான்....


அன்பு செல்வங்களுக்கு 

எனது அன்பான....

குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்


(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)