உலகப் பார்வை கொண்டு நம் குழந்தைகளைப் பார்ப்போம்!

Nov 14, 2025,03:55 PM IST

- பா.அகிலாண்டேஸ்வரி


நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி. ஆம் நாடும், வீடும் போற்றிடும் குழந்தைகளை அவர்களின் மொழியை, குறும்புத்தனத்தை வார்த்தைகளில் வர்ணித்துக் கொண்டே போகலாம்.


கல்லையும் கனியாக்கும் அந்த மழலை மொழி அப்படி என்ன சக்தி அதில் உள்ளது என்று கேட்பவர்களுக்கு பதில் என்ன தெரியுமா? மழலைகளிடம் பேசிப் பார் புரியும் என்பதே ஆகும். ஆம் குழந்தை கருப்போ ,சிகப்போ அது பேசும் இல்லை ,இல்லை பார்க்கும் அழகே தனி சிறப்பு வாய்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தைகள் கை கால்களை அசைத்து ,அசைத்து துடுக்காய் தொட்டிலில் விளையாடும் மகிமையை கண்டால் கல்லும் கனியாகும்.நம்மை பார்க்கும் அந்த பார்வையின் காந்த சக்திக்கு மயங்காதவர் யாரும் இல்லை.


சுட்டிப் பூக்கள் 




மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் இளந்தென்றலே என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்கள். இவர்களுக்கு தான் எத்தனை சவால்கள் அப்பப்பா! அப்படி என்ன சவால்கள் என்று தானே கேட்கிறீர்கள் ? சொல்கிறேன் கேளுங்கள் .இவர்களுக்கு பிறப்பெடுப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலாகிப் போகிறது .அதையும் மீறி பிறந்தால், பிறந்த ஒன்றரை முதல் இரண்டு வருடங்களில் பள்ளிப்படிப்பை இல்லை, இல்லை,மழலையர் படிப்பை தொடங்கணுமாம். அப்பத்தான் பள்ளிப்படிப்பை தொடங்கும் போது சரியாக பள்ளிக்குச் செல்வார்களாம். இது இன்றைய அம்மாக்களின் கூற்றாகும். 


குழந்தைகள் உருண்டு பிரண்டு ,தவழ்ந்து ,தாவி ,ஓடி ஆடியது எல்லாம் அந்த காலம் இன்றைய சூழலில் கிடைப்பதற்கு அரிதாய் போன பொக்கிஷங்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அம்மாக்கள் கொஞ்சம் ஓவராக தான் அக்கறை காட்டுகிறார்கள். குழந்தைகளின் சேட்டைகள் எல்லாம் செல்போனில் தான் அனைத்து மின்னணு சாதனங்களின் தொழில்நுட்பத்தை கருவிலே கரைத்து குடித்தவர்கள் போல் சர்வ சாதாரணமாய் பயன்படுத்தும் லாவகம் இருக்கிறதே அப்பப்பா! 


குழந்தைகளின் தன்மை அறிந்தவர்கள் 


மயில் தோகையை விட மென்மையான மனம் கொண்ட இந்த குழந்தைகள் எதையும் எளிதில் கற்கும் திறன் கொண்டவர்கள். அதனால் தான் இன்றளவும் குழந்தைகளுக்கு வாழ்வதற்கு உண்டான பயிற்சிகள் அனைத்தும் அந்தந்த வயதில் கற்றுக் கொடுக்கிறார்கள் .இங்கு இல்லை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில். 


ஆம் .குரு, சிறு குழந்தைகளில் இருந்தே தொடங்குகிறது சுத்தம், சுகாதாரம் ,பொருள்களை எப்படி கையாள்வது ?,எப்படி உணவை சமைப்பது ?,பரிமாறுவது? பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது? வெளியுலகை எப்படி சந்திப்பது ?டிராபிக் ரூல்ஸை எப்படி மதிப்பது? இது போன்ற பல அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை பாடங்களுக்கு  நடுவே  கற்றுக் கொள்கிறார்கள் .அதனால் பல திறமைசாலிகள் உருவாக்கப்படுகிறார்கள்.


இறுதியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் தோழிகளே. உலக பார்வை கொண்டு பார்த்தோம் என்றால் நம் நாட்டு குழந்தைகள் பாதுகாப்பாக மற்றும் மதிப்பெண்கள் வாங்கும் கருவியாக வளர்கிறார்கள் அவற்றோடு கூட நல்ல ஒழுக்கங்கள் பல கற்றுக் கொண்டால் வீடும் நாடும் கண்டிப்பாக சிறக்கும் என்பதில் ஐயமில்லை.


(பா. அகிலாண்டேஸ்வரி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

அதிகம் பார்க்கும் செய்திகள்