குழந்தைகள்.. சிரிப்பிலே தேன்சிட்டு.. சிந்தனையிலோ மணி மொட்டு!

Su.tha Arivalagan
Nov 14, 2025,12:55 PM IST

- அ.கோகிலா தேவி


குழந்தைகள்..  நம்பிக்கை நட்சத்திரங்கள். நாளைய உலகின் கனவு பொக்கிஷங்கள். எதிர்காலத்தின் சிற்பிகள்.


ஒவ்வொரு குழந்தையும் நம் நாட்டின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் அவர்களே நம் சமுதாயத்தின் கண்கள், தன்னம்பிக்கை சின்னங்கள்.


குழந்தைகளின் முக்கியத்துவம்: இன்றைய குழந்தைகளே நாளைய உலகின் பல்வேறு துறைகளில் முக்கிய பங்குகளாக உருவெடுக்கின்றனர். எனவே நாம் அவர்களுக்குத் தேவையான கல்வி, அன்பு, பாதுகாப்பு, ஊட்டச்சத்தான உணவு ஆரோக்கியமான சுத்தமான சூழ்நிலைகளை உருவாக்கி தர வேண்டியது நமது தலையாய கடமை ஆகும்.


குழந்தைகளின் களங்கமற்ற சிரிப்பு, எல்லையற்ற ஆற்றல். கற்பனை திறன் ஆகியவை அவர்களின் தனித்தன்மை வாய்ந்த உலகமாகும்.




குழந்தைகள் நமது மகிழ்ச்சியின் ஆதாரம். அவர்களை நாம் நேசிக்க மற்றும் மதிக்க வேண்டும். அவர்களின் கனவுகளை அடைய நாம் அவர்களுக்கு ஆரோக்கியமான மகிழ்ச்சியான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது நமது தலையாய கடமைகளுள் ஒன்று.


க்யூட் குழந்தைகளுக்காக ஒரு குட்டிக் கவிதை


குழந்தைகள் மலர்கள்

இப்பூமியின் வாசங்கள்

சிரிப்பிலே தேன்சிட்டு

சிந்தனையிலோ மணி மொட்டு


மின்மினி பூச்சியாய் மிளிர்ந்து

வீடெங்கும் ஒளி நிரப்பி

கள்ளமில்லா சிரிப்பில்

கவலையை நீக்குவர்


அவர்களோ பூமாலை

உலகெங்கும் மணம் வீச

அம்மாலை வாடாமல்

நல் எதிர்காலம் தந்திடுவோம்.


(அ.கோகிலா தேவி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)