- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
பத்துத் திங்கள்
பத்திரமாய் காத்து
முத்துச் சிரிப்புக்கு
முகம் ஏங்கும்
ரத்தப் பிசுக்கில்
குத்தம் குறையில்லா
குழவி வரும்
கலவி மூலம்
பெண்ணை தாயாக்கி
ஆணை தந்தையாக்கி
அந்தஸ்தை கொடுக்கும்
அன்புக் குழந்தை

கன்னக்குழி சிரிப்பும்
நாபிக்குழி சுழிப்பும்
கன்னமதக் களிறாய்
மதம் ஏற்றும்
மல்லாக்கப் படுத்தால்
நல்லாத்தான் இருக்கும்
குப்புறப் படுத்தால்
ஒப்புக்கு உரையேது?
தவழும் போதும்
தட்டு தடுமாறி
தளிர் நடை
பழகும் போதும்
பார்க்கும் பெற்றோர்
பாக்கியம் பெற்றோர்
கொழ கொழ குழந்தை வாக்கியம்
கலகல மழலைக் காவியம்
குழல் இனிது யாழ் இனிது 'என்று
பிஞ்சின் பேச்சு
வள்ளுவத்தைக் கூட வழுக்கச் செய்யும்
மழலைக் கட்டி நீ
சுகமான சுட்டி நீ
பெற்றோரின்
பேச்சு நீ
பாட்டி தாத்தாவின்
மூச்சு நீ
தேசத்தின்
தூண் நீ
அன்புப் பாலூட்டும்
ஆண் நீ
தாலாட்டும் அன்னையின்
வாலாட்டும்
வாரிசு நீ
அறம் ஊட்டும் அத்தனின்
உரம் கூட்டும் உயிர் நீ
பேதம் இல்லா
வேதம் நீ
உயிர் பொருளின்
ஓதம் நீ
பரம்பொருளின்
பாதம் நீ
உனது உச்சா
மந்திர நீர்
உனது மெளன உதை
உலகளந்தோன் சடாரி
தாவரத்தின் தாவரம் போல்
மானுடத்தின் மானுடம்
வெள்ளை மனத்து
கொள்ளை கொள்ளும்
குட்டிக் குழந்தை
ஆயர்பாடியில்
ஆடிக்கிடந்த
கண்ணனை நினைவூட்டும்
குழந்தையும் தெய்வமும்
சரிசமம் என்று
குவலயம் எழுதிக் காட்டும்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
{{comments.comment}}