அதிகாலையில் விழிப்பவரும்.. இளமையில் உழைப்பவரும்... முதுமைக்கு முன் சேமிப்பவரும்!
டி.கலைமணி
வானமே இடிந்து உன் தலையில் விழுகிற சூழல் வந்தாலும்
உன் மனம் இப்படித்தான் யோசிக்க வேண்டும்.
முருகர் இருக்கிறார்.
கை விட மாட்டார்.
ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால்..
முதலில் தாய்க்கு செய்.
ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் ..
முதலில் தந்தைக்கு செய்.
அதிகாலையில் விழிப்பவரும் --
இளமையில் உழைப்பவரும் .
முதுமைக்கு முன் சேமிப்பவரும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் --
அவசரமாய் வாழ்க்கை துணையை தேடாதீர்கள்.
வாழ்க்கை முழுவதும் துணையாய் வருபவராய் தேடுங்கள்.
படித்த திமிரை ஒருபோதும் படிக்காத பெற்றோரிடம் காட்டாதீர்கள்
படிக்காத அவர்கள்தான் நம்மை படிக்க வைத்தார்கள்.. நினைவில் கொள்!
இந்தத் தத்துவக் கவிதையின் பொருள் என்ன தெரியுமா..
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்; அதுபோல, வாழ்க்கையில் தடைகள் வரும்போதுதான் நம் தன்னம்பிக்கையின் பலம் தெரியும்.
கடவுள் மீதான நம்பிக்கை உனக்கு ஆறுதல் தரும் என்றால், உன் உழைப்பின் மீதான நம்பிக்கை உனக்கு வெற்றியைக் கொடுக்கும். உலகம் உன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று ஓடுவதை விட, உனது மனசாட்சி உன்னை மெச்சும் படி வாழ்வதே உன்னதமானது.
அன்பை விதைப்பவன் நிம்மதியை அறுவடை செய்கிறான்; பொறுமையைக் கடைபிடிப்பவன் காலத்தை வெல்கிறான். எனவே, எதற்கும் கலங்காதே... கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார், உன் திறமை உனக்கே புரியும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)