பிரியாணிக் காதல்!
- கவிதை மழை அ நவஜோதி அருண்
அடுப்பெரித்து...
அண்டா வைத்து...
இடுப்பொடிய வெங்காயம் வெட்டி...
ஆயிலிட்டு, நெய்யுமிட்டு,
அதில் வெங்காயத்தை வதக்கிப் போட்டு,
கருக்காமல் முறுக வறுத்து...
வாயிலிட்டுப் பார்த்த பின்பு,
வாகாகப் பட்டை, கிராம்பு,
ஏலம் போட்டு...
இஞ்சி, பூண்டு இடித்துப் போட்டு,
பச்சை மிளகாய் வகுந்து போட்டு...
கரம் மசாலா கணக்காய்ப் போட்டு,
கொஞ்சம் சிவந்த மிளகாய்த் தூளைப் போட்டு...
வதக்கி வைத்த மசாலாவில்
பதுக்கி வைத்து கோழி போட்டு...
புளிக்காத தயிரைக்
கொஞ்சம் புதிதாக வாங்கிப் போட்டு...
கலக்கிவிட்டு... கலக்கிவிட்டு...
கழுவிய அரிசியைக் கையள்ளிப் போட்டு...
மல்லி, புதினா மெதுவாகத்
தூவி...
தம்மைக் கட்ட,
சிம்மில் வைத்து,
சில மணித் துளி..நீ...!
காத்திருக்க...
கடைசியில் நீ...
காதலித்த கோழி பிரியாணி...
கூவாமல்...
உன்னை எழுப்பிவிடும்...
ஆசையோடு கிளப்பிவிடும்...
அப்புறமென்ன???
பிரியாணிக் காதல்!
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்.