- மணிமா
செட்டிநாட்டு அடுப்படியின் அத்தனை ரெசிபிகளுக்கும் நல்ல வரவேற்பு தந்து உங்கள் பாராட்டுக்களை மனப்பூர்வமாக பதிவு செய்து மகிழ்விக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும்..
மணிமாவின்.. அன்பு நிறை வணக்கங்கள்.
வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு குறைவான நேரத்தில் குறைவான பொருட்களுடன் அன்பையும் சேர்த்து சமைத்தால் அதிக சுவையோடு செட்டிநாடு ரெசிபி தயார் தயார்.
அந்த வரிசையில் இன்று ஒரு அசத்தலான இட்லி பொடி, முருங்கைக்கீரை எள்ளு பொடி பார்ப்போமா.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை ஒரு கட்டு நிறைய
ஒரு கப் கருப்பு முழு உளுந்து 50 மில்லி கிராம்
ஒரு கப் பாசிப் பயறு ஐம்பது மில்லி கிராம்
ஒரு கப் பாசிப்பருப்பு 50ml கிராம்
ஒரு கப் வெள்ளை எண் 50 ml
வறுத்த நிலக்கடலை கால் கப்
பாதாம் பருப்பு நான்கு (பாதாம் பருப்பு கண்டிப்பாக வேண்டும் என்பது இல்லை)
மிளகாய் வற்றல் 20
தேவையான உப்பு
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை அளவு
இந்த பொடி தயார் செய்வதற்கு ஐந்து நாட்கள் முன்பு முருங்கைக்கீரை தட்டு நிறைய எடுத்து வீட்டிற்குள்ளேயே இரண்டு தாம்பாளத்தில் பரப்பி நிழலில் உலர்த்தி விடுங்கள். அப்படியே முழுதாகவே உலர்த்தி விடலாம். நான்கு நாட்கள் கழித்து இலைகள் உதிர்ந்து விடும் மீதி உள்ள குச்சிகளை எல்லாம் நீக்கி விடலாம். நன்கு சருகு போல் கிடைக்கும் .
இப்பொழுது அடுப்பில் மிதமான தீயில் வானிலை வைத்து எண்ணெய் எதுவும் விடாமல் காய்ந்த முருங்கை இலைகளை இரண்டு பிரட்டு பிரட்டி சூடு வந்தவுடன் இறக்கி ஆற வைக்கவும் .கண்டிப்பாக கருகிவிடக்கூடாது.
லேசாக ஆறியபின் மிக்ஸியில் இட்டு நைசாக பவுடராக செய்து தனியா எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு கருப்பு முழு உளுந்தை நன்கு வறுக்கவும். எடுத்து தட்டில் கொட்டவும்.
திரும்ப இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு பாசிப்பயிரைக் கொட்டி வறுக்கவும். அதனையும் சேர்க்கவும். அடுத்து இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு பாசிப்பருப்பை சிவக்க வறுத்து சேர்க்கவும்.
இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு எள்ளையும் கருகிவிடாமல் பொரிந்து வரும் போது எடுத்து சேர்த்துக் கொள்ளவும். அடுத்து வறுத்த நிலக்கடலையையும் பாதாம் பருப்பை தட்டியும் சேர்த்து லேசாக சூடு வந்தவுடன் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்து விடவும். மீதமுள்ள உப்பையும் பெருங்காயத் தூளையும் வானலிச்சூட்டில் லேசாக பிரட்டிவிட்டு சேர்க்கவும்.
இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு, வறுத்த 20 மிளகாய், இவற்றை முதலில் மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடி பண்ணவும். அடுத்து வறுத்த அத்தனை பருப்புக்களையும் மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இறுதியாக அரைத்து வைத்துள்ள முருங்கைக் கீரை பொடியையும் மிக்ஸியில் கொட்டி ஒரு முறை ஓடவிட்டு கலக்கி எடுத்து வைக்கவும்.
தாம்பாளத்தில் கொட்டி நன்கு ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் எடுத்து அடைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு மாதத்தில் இருந்து ஐந்து மாதம் வரை வெளியே வைத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாமல் இருக்கும்.
செய்வது மிக மிக எளிது. நிறைந்த சத்துள்ளது முடி கொட்டுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எப்பவும் சோம்பலாக இருப்பவர்கள் இந்த பொடியை சேர்த்துக் கொள்ளலாம். தோசை வார்த்து அதன் மேல் இந்த பொடியை தூவி அதன் மேல் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பொடி தோசையாகவும் சாப்பிடலாம்.
சூடான இட்லி நான்கு தட்டில் வைத்து பக்கத்தில் இரண்டு ஸ்பூன் பொடி வைத்து அதில் ஒரு குழி பண்ணி அதற்குள் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஒரு விரலால் குழப்பி இட்லியை விட்டு தொட்டு சாப்பிட, சுவையோ அபாரம், அதி அற்புதமாக இருக்கும். ருசித்து சாப்பிட்டு ரசித்து மகிழுங்கள்.
மீண்டும் ஒரு சுவையான செட்டிநாட்டு ரெசிபியுடன் உங்களையெல்லாம் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து அன்புடன் விடைபெறுவது என்றென்றும் உங்கள் அன்பு... மணிமா... நன்றி
{{comments.comment}}