கானகம்!

Su.tha Arivalagan
Nov 17, 2026,10:30 AM IST

- கவிதை மழை அ. நவஜோதிஅருண்


பசும்

புல்வெளிகள்

கிரீச்சிடும்

கிளிகள்


நிழல் தரும்

மரங்கள்

தேவையில்லை

உரங்கள்


கிளைகள்

வீசிய

காற்று

அருகே ஓடும்

ஊற்று


வண்ணப்பூவின்

வாசம்.. ! 

வண்ணத்துப்பூச்சி

நேசம்




பாடும்

பறவை

தேடும்

இயற்கை


குளத்து

மீன்கள்

பழத்து

வண்டுகள்


புழுத்தின்னும்

மீன்கள்

மீன்த்தின்னும்

நாரைகள்


தென்றல்

பாடும்

கானம்

எழில்

கொஞ்சும்

கானகம்


இறைவனின்

படைப்பில்

காடு... 

பூமியின்

குருதிக்கூடு


அடடே! 

மனமோ

துள்ளுது! 

துள்ளுது! 

துள்ளுது! 


என்னை

கவிதை

எழுதச் சொல்லுது


(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர்.  சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)