மறக்க முடியாத அனுபவம்!

Nov 17, 2026,10:25 AM IST

- ஆ.வ.உமாதேவி


நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பல மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும். எனக்கு அதுபோல பல அனுபவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் விளைவே இக்கட்டுரை. 


1988 ல் 38 ஆண்டுகளுக்கு முன்னால், நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெண்கள் உயர்நிலைப் பள்ளி அது. ஒரு நாள் ஆங்கில ஆசிரியர் வகுப்பில் நாளை, JENNY ESSAY பார்க்காமல் எழுத வேண்டும் என்று சொல்லி உள்ளார். நான் அதை கவனிக்க தவறி விட்டேன். 


ஆங்கிலப் புத்தகத்தில் ஐந்தாவது பாடம் JENNY என்ற கதை. அந்த பாடத்திற்கு ESSAY வை நாளை பார்க்காமல் எழுத வேண்டும் என வகுப்பில் ஆசிரியர் கூறியுள்ளார்கள். நான் அதை கவனிக்கவில்லை. அத்தகவல் எனக்கு தெரியாமல் போயிற்று. 


மறுநாள் காலை பள்ளிக்கு வந்தவுடன் என் தோழிகள் JENNY ESSAY படித்து விட்டாயா? என்று கேட்டவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி! என்ன செய்வதென்றே புரியவில்லை. பயம் கலந்த படபடப்பு வந்து விட்டது. இரண்டாவது பாடவேளை தான் ஆங்கில பாடம். என்னுடைய நல்ல நேரம் முதல் பாட வேளையில் வரவேண்டிய தமிழாசிரியை அன்று விடுப்பு எடுத்துவிட்டார். கடவுள் எனக்கு தயை காட்டி உள்ளார்.




முதல் பாடவேளை நேரத்தில் காலியாக இருந்த ஒரு வகுப்பறைக்குச் சென்று அமர்ந்து 40 நிமிடத்தில் அக்கட்டுரையை மனப்பாடம் செய்து விட்டேன். எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னையே என்னால் நம்ப முடியவில்லை. அடுத்து ஆங்கில பாட வேளையில் தவறில்லாமல் சரியாக எழுதி பத்துக்கு பத்து மதிப்பெண் பெற்றுவிட்டேன். 


எங்கள் பள்ளி போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் அமைந்துள்ளது. அச்சாலையில் எப்போதும் பேருந்துகளும் சரக்கு உந்துகளும் ஒலிப்பான்களை ஒலித்தவாறு சென்று கொண்டே இருக்கும். என்னிடம் உள்ள ஒரு குணம் என்னவெனில், என்னால் சத்தம் உள்ள இடத்தில் படிக்கவே முடியாது. ஆனால், அன்று பள்ளி மாணவிகளின் சத்தம் மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களின் சத்தம் இவற்றை மீறி Essay வை 40 நிமிடத்தில் படித்து முடித்து விட்டேன். 


சில ஆண்டுகளுக்கு முன் இந்நிகழ்வை நினைத்துப் பார்த்த போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. நம் மனத்தை ஒருமுகப்படுத்தினால் சிந்தையை சிதறவிடாமல் இருந்தால் எந்த சத்தமும் நம் காதுகளை அடையாது என்று. 


"வில்லுக்கு விஜயன்" என்ற பெயர் பெற்ற அர்ஜுனனும் இதைத்தான் கடைப்பிடித்தான். இன்று வரை முயற்சிக்கிறேன் என்னால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கும்...


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாதங்களுக்குப் பிறகு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரிந்த தங்கம் விலை

news

கானகம்!

news

மறக்க முடியாத அனுபவம்!

news

தென்தமிழ் தலையங்கம்: இந்திய அரசியலில் சோனியா காந்தியின் அசைக்க முடியாத பயணம்!

news

வங்கக்கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல்: வடதமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!

news

அமைச்சர் ஆதவ் அர்ஜூவாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

news

பாலகிருஷ்ணன் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

news

கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 27-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

news

திருவண்ணாமலையில் கோலாகலமாக களை கட்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்