திருவண்ணாமலையில் கோலாகலமாக களை கட்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

Nov 16, 2026,12:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி 


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா (2026) நவம்பர் மாதம் 15 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

15.11.2026 முதல்  தீபத்திருவிழா 24.11.2026 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.


 தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற  ஆன்மீகத் திருவிழாக்களில் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ள திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா   இம்மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அமைய பெற்றுள்ளது. 


 திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சிகள்:




நவம்பர் 12-ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற்றது.


 நவம்பர் 13 ஆம் தேதி பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது.


 நவம்பர் 14ஆம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது.


நவம்பர் 15 ஆம் தேதி கொடியேற்றம் காலை 6:05 மணி முதல் 7:35 மணி வரை சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. பத்து நாட்கள் பிரம்மோற்சவம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. திருவிழா நாட்களில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். காலை, மாலை என பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.


18.11.2026 - புதன்கிழமை வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனம்.


19.11.2026 வியாழன் வெள்ளி ரிஷப வாகனம்.


20.11.2026 வெள்ளிக்கிழமை வெள்ளி ரதம்.



21.11.2026 சனிக்கிழமை பஞ்ச மூர்த்திகள் மகா ரதம் தேரோட்டம்.

காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் வடம் பிடித்தல். அண்ணாமலையார் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வருவார்.



24.11.2026 செவ்வாய்க்கிழமை காலை 4:00 மணி அளவில் கோவிலுக்குள் 'பரணி தீபம்' ஏற்றப்படும். சிவபெருமானின் ஜோதி வடிவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு  வாய்ந்ததாகும் .


மாலை 6:00 மணி அளவில் திருவண்ணாமலையின் அடையாளமாக விளங்கும் அண்ணாமலை சுமார் 2668 அடி உயரம் கொண்டது. இந்த மலை உச்சியில்தான் பிரம்மாண்டமான கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தொலைதூரங்களில் இருந்தும் இந்த ஜோதியை பக்தர்கள் தரிசிக்க இயலும். மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் தீபம் ஒளிரும் என்பது இந்த திருவிழாவின் தனிச்சிறப்பாகும்.


பௌர்ணமி கிரிவலம்: நவம்பர் 23ஆம் தேதி இரவு தொடங்கி நவம்பர் 24ஆம் தேதி வரை பௌர்ணமி கிரிவலம். ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை  அண்ணாமலையாரை  வழிபடுவதற்காக மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் அஷ்ட லிங்கங்களை பக்தர்கள் தரிசிக்கலாம்.


மகாதீபம் ஏற்றப்படும் நேரத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் இருந்து எழுந்தருளும் சிறப்பான நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.



 

தெப்பல் உற்சவம் :

 மகா தீபத்தைத் தொடர்ந்து நவம்பர் 25, 26, 27 தேதிகளில் தெப்பல் உற்சவங்கள் நடைபெறுகின்றன. அய்யங்குளத்தில்   நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


 கார்த்திகை தீபத் திருவிழாவின்   நிறைவு நிகழ்ச்சி :

நவம்பர் 28ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 2026 ஆம் ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.


 அண்ணாமலையாருக்கு அரோகரா!


 நாளை பிறக்கும் கார்த்திகை மாதம் அனைவர் வாழ்விலும் ஒளி வீசட்டும்.

மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான   ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உண்மையான சொத்து இதுதான்!

news

திருவண்ணாமலையில் கோலாகலமாக களை கட்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

news

சத்து நிறைந்த மொறுமொறுப்பான நவ தானிய தோசை!

news

நல்லாசிரியர் த. பொன் ரேகாவின் புதுமையான வழிகாட்டுதலில் மலர்களால் மிளிர்ந்த திருவள்ளுவர்!

news

தென்தமிழ் தலையங்கம்: அமைதியான உலகிற்குத் தேவையான அவசியமான பண்பு.. சகிப்புத்தன்மை!

news

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; நவம்பர் 16ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

news

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார்தாரர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

news

தென்தமிழ் தலையங்கம்: குழந்தைகளின் புன்னகையே நாளைய தேசத்தின் பலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்