சத்து நிறைந்த மொறுமொறுப்பான நவ தானிய தோசை!

Nov 16, 2026,11:15 AM IST

- பசுங்கிளி


உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆற்றலும் நிறைந்த பாரம்பரிய உணவுகளில் நவதானியங்களுக்கு எப்போதுமே தனி இடமுண்டு. 


அரிசிக்கு மாற்றாக ஆரோக்கியமான தானியங்களைச் சேர்த்துச் செய்யக்கூடிய இந்த நவதானிய தோசை, உடலுக்கு வலு சேர்ப்பதுடன் சுவையிலும் மிகவும் அருமையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த இந்த மொறுமொறுப்பான தோசையை வீட்டிலேயே எளிமையாக எப்படிச் செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.


தேவையான பொருட்கள்


1. கேழ்வரகு - 100 கிராம்

2. கம்பு - 100 கிராம்

3. சோளம் - 100 கிராம்

4. சிகப்பு அரிசி - 100 கிராம்

5. கருப்பு கவுனி அரிசி - 100 கிராம்

6. பச்சை பயறு - 100 கிராம்

7. குதிரைவாலி அரிசி - 100 கிராம்

8. வரகு அரிசி - 100 கிராம்

9. கருப்பு உளுந்து - 200 கிராம்

10. இஞ்சி - சிறிய துண்டு

11. சோம்பு - 1 டீஸ்பூன்

12. வரமிளகாய் - 4

13. பூண்டு - 10 பல்

14. உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை




1. ஒரு அகலமான பாத்திரத்தில் நவதானியங்களைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. நன்றாக ஊறியவுடன், அவற்றை கிரைண்டர் அல்லது மிக்சியில் மாற்றவும்.

3. அதனுடன் இஞ்சி, சோம்பு, வரமிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த மாவைப் பாத்திரத்தில் எடுத்து வைத்து, இரண்டு மணி நேரம் புளிக்க விடவும்.

5. பின்பு, அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடானதும், மாவை ஊற்றிச் சுற்றி எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.


இப்போது மொறுமொறுப்பான சுவையான நவதானிய தோசை தயார்! இதற்குத் தேங்காய் சட்னி வைத்துச் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சத்து நிறைந்த மொறுமொறுப்பான நவ தானிய தோசை!

news

நல்லாசிரியர் த. பொன் ரேகாவின் புதுமையான வழிகாட்டுதலில் மலர்களால் மிளிர்ந்த திருவள்ளுவர்!

news

தென்தமிழ் தலையங்கம்: அமைதியான உலகிற்குத் தேவையான அவசியமான பண்பு.. சகிப்புத்தன்மை!

news

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; நவம்பர் 16ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

news

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார்தாரர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

news

தென்தமிழ் தலையங்கம்: குழந்தைகளின் புன்னகையே நாளைய தேசத்தின் பலம்!

news

வங்கக்கடலில் உருவாகிறது 'அக்வான்' புயல்; தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

news

உயர்வுகள் காணத் துடிக்கும் வெண்ணிலாக்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்