கருவறைக் கல்லறை!
Oct 10, 2026,01:39 PM IST
- கவிதை மழை அ. நவஜோதி அருண்
கயிறு
கட்டாத,
கருவறைத்
தூளியிட்டு.,
என்னை
ஆட்டியவள்.. !
வயிறு
பந்துதைத்து,
நான் விளையாட
தந்தவள்..!
இதயத்
துடிப்பையே
நாதத்...
தாலாட்டாக்கி
நடந்தவள்.. !
இருளறையாய்
கருவறையிருக்க...!
ஒருமுறைகூட
பயந்ததில்லை..
நான்..!
குறுகப்படுத்தே,
இறுகப்பற்றிக் கொண்டேன்.
அவளை.... !
கருவறையே,
கல்லறையானால்...
காலம்முழுக்கக்
கிடந்திருப்பேன்.. !
விதிமுறையே,,,
பத்துதிங்களாகிட
பித்துப்பிடித்துப்
போகிறேன்..
இடைக்கால
நிம்மதிக்கு,
சிறையுலக
வாழ்க்கைப்
போதும்..!
உன்கருவறைதான்
வேண்டும்... !
கடைசிவரை
சுமப்பாயா?
என் கோரிக்கையை
ஏற்பாயா?
அம்மா..!