பாட்டியானாலும் பிரச்சினை!

Oct 07, 2026,05:14 PM IST

- ராஜஸ்ரீ


பார்வதி பரமசிவன் தம்பதியருக்கு ஒரே மகள் மாலதி. திருமணமாகி கணவன் வீட்டில் வாழ்ந்து வருகிறாள். ஒருநாள் பரமசிவன் வீட்டின் கதவு தட்டப்பட்டது. பார்வதி சென்று கதவைத் திறந்தாள். மாலதி பெட்டியுடன் இருந்தாள். 


பார்வதி வா,வா என்று வரவேற்றாள். பிறகு  என்ன பெட்டியோடு வந்திருக்கிறாய்? மாப்பிள்ளை எங்கே? என்று கேட்டாள்.


மாலதி அழுதவாறு அம்மா,  இனி நான் அங்கே இருக்க மாட்டேன். அவர் என்னை ரொம்ப தொந்தரவு செய்கிறார் என்றாள். பார்வதி  சரி சரி உள்ளே வா என்று அழைத்தாள். 


பரமசிவம் வந்தார் என்ன விஷயம் பார்வதி?  என்று கேட்டார். அதற்கு பார்வதி, மாலதி வந்திருக்கிறாள். மீண்டும் மாப்பிள்ளை அவளை தொந்தரவு செய்கிறாராம் என்றாள்.


பரமசிவம் நொந்துபோய் என்னமா,  பிரச்சனை வளர்ந்து கொண்டே போகிறதே. என்றுதான் தீரும்?  என்று புலம்பினார். பார்வதி, வேண்டிய சீர் வரிசை  செய்து விட்டோம். அவ்வப்பொழுது பணம் கொடுக்கிறோம். இன்னும் என்ன வேண்டும் அவருக்கு? என்றாள் 




அப்பொழுது வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.  பார்வதி சென்று திறந்தாள். அங்கே ஒரு கணவன், மனைவி, கூடவே ஒரு சிறுவனும் இருந்தான்.


பார்வதி அவர்களை வரவேற்க அவர்களும் உள்ளே வந்தனர். அந்தக் கணவன் நேராக மாலதியிடம் சென்று அம்மா,  அப்பாதான் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்வார் என்று உனக்குத் தெரியும். உடனே இங்கு வந்து விட்டாயே? என்று கேட்டான்.


அவன் மனைவியும் அத்தை,  நாங்கள் உங்கள் பக்கம் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? வாருங்கள் வீட்டுக்கு என்றாள். அந்த சிறுவனும் பாட்டி நீ இல்லாமல் வீடு அழுது வடிகிறது. உடனே வா என்றான்.


பரமசிவம் மாலதியைப் பார்த்து மாலதி எனக்கும் என்பது வயதாகிவிட்டது. உனக்கும் அறுபது வயது ஆகிவிட்டது. இனிமேலும் நீ கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்தால் எப்படி? உன் மகன் மருமகள் பேரன் இவர்களுடன் மகிழ்ச்சியாக  இருக்கலாமே. அதன் மூலம் உன் கணவர் செய்யும் கொடுமைகளை மறந்து விடலாம் என்றார் 


சரி அப்பா,  கிளம்புகிறேன்  என்று கூறிவிட்டு தனது மகன், மருமகள், பேரனுடன் கணவன் வீட்டுக்கு கிளம்பினாள் அறுபது வயது மாலதி பாட்டி. 


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற  மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்